தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிப்பது குறித்து... தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் தொழில்பழகுநர் பயிற்சி சென்னையிலுள்ள தமிழ்நாடு வாகனப் பராமரிப்புத் துறையில் பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்களை பார்ப்போம்... பயிற்சியின் பெயர்: Graduate Apprentice காலியிடங்கள்: 18 உதவித்தொகை: மாதம் ரூ.12,300 தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பொறியியல் துறையில் முழு நேரப் படிப்பாக மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். பயிற்சியின் பெயர்: Diploma Apprentices காலியிடங்கள்: 61 உதவித்தொகை: மாதம் ரூ.ரூ.10,900 தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பொறியியல் துறையில் முழு நேரப் படிப்பாக மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் பட்டயம்(டிப்ளமோ) முடித்திருக்க வேண்டும். 2022, 2023 2024, 2025, 2026-ஆம் கல்வியாண்டுகளில் முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் நவம்பர் இரண்டாவது வாரம் இணையதளத்தில் வெளியிடப்படும். நேர்முகத்தேர்வு நவம்பர் மாதம் நான்காவது வாரம் தொடங்கும். நேர்முகத் தேர்வின்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் தங்களுடைய தகுதி மற்றும் இதர விபரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். பின்னர் மேற்கண்ட இணையதளத்தால் வழங்கப்படும் Unique Enrolment Number-ஐ பயன்படுத்தி அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Top Down Button-ஐ கிளிக் செய்து Tamil Nadu Motor Vehicles Department-ஐ தேர்வு செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.10.2026 தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் தொழில்பழகுநர் பயிற்சி: உடனே விண்ணப்பிக்கவும்!