தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் மாற்றப்பட்டது பற்றி... சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர். - கோப்புப்படம் தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர், மின்வாரிய தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிஐடியின் அமலாக்கப் பிரிவு இயக்குநராக இருந்த கே. சங்கரை சிறைத்துறை டிஜிபியாக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறைச்சாலையில் கடந்த திங்கள்கிழமை இரவு 17 கைதிகள், சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், 36 மணிநேரத்தில் 17 பேரும் மீண்டும் பிடிபட்டனர். இந்த விவகாரத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக தேனி மாவட்ட சிறைச்சாலையைச் சேர்ந்த 9 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். மேலும், சிறைச்சாலையில் சூழலுக்கேற்ப காவல்துறையினர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவும் சந்தீப் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தார். முன்னதாக, கடந்த வாரம் புழல் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பியோடிய நிலையில், மீண்டும் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை தொடர்ந்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோரை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் காலகட்டத்தில் மாநிலத்தின் காவல்துறை தலைவராக சந்தீப் ரத்தோர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் மாற்றம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗