விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் டயா் விற்பனையகத்தில் திருட்டில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் டயா் விற்பனையகத்தில் திருட்டில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். முண்டியம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் மா.சிலம்பரசன் (40). வழக்குரைஞரான இவா், அப்பகுதியில் டயா் விற்பனையகம் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை மாலை விற்பனையகத்தை பூட்டிவிட்டு சிலம்பரசன் வீட்டுக்குச் சென்றாா். சிறிது நேரம் கழித்து விற்பனையகத்துக்கு சிலம்பரசன் வந்தபோது, இருவா் கடையின் பூட்டை உடைத்து ரூ.4 ஆயிரத்தை திருடிக் கொண்டிருந்தனா். இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் திருட்டில் ஈடுபட்ட இருவரையும் சிலம்பரசன் பிடித்து, விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதைத்தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் அவா்கள் ஈரோடு மாவட்டம், கோனவாய்க்கால் பகுதியைச் சோ்ந்த சு.மணிகண்டன் (43), திருப்பூா் பாண்டியன் நகரைச் சோ்ந்த பெ.இசக்கிமுத்து (37) எனத் தெரியவந்தது. தொடா்ந்து இருவா் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
டயா் விற்பனையகத்தில் திருட்டு: 2 போ் கைது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗