டெல்லி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பலன் என்ன? எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு உள்ள சவால்கள் என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
டெல்லி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பலன் என்ன? எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு உள்ள சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Amarjeet Kumar Singh/Anadolu via Getty Images காலை 10 மணியளவில், மிண்டோ பாலம் அருகே போக்குவரத்து வழக்கம்போல இயங்கிக்கொண்டிருந்தது. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் அங்கு கூடத் தொடங்கியிருந்தனர். ஆனால், அன்று பிற்பகலுக்குள் ஆயிரக்கணக்கில் காணப்பட்ட மக்கள் கூட்டம் லட்சக்கணக்காக அதிகரிக்கும் என்று அப்போது கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. இருப்பினும், முந்தைய போராட்டங்களைவிட இந்த முறை சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. டெல்லிக்கு அருகிலுள்ள உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் தொலைதூர மாவட்டங்களில் இருந்தும் அவர்கள் வந்திருந்தனர். நாடு முழுவதிலுமிருந்து காங்கிரஸ் தொண்டர்களும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் தொண்டர்களும் இந்தப் பிரமாண்ட பேரணியில் பங்கேற்க வந்திருந்தனர். குஜராத்திலிருந்து வந்திருந்த காங்கிரஸ் தொண்டர் ஷாஜத் கான் பிபிசியிடம் கூறுகையில், "காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களும் இந்த பேரணியில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வருகின்றனர்" என்றார். இருப்பினும், மிண்டோ சாலை அருகே அதிகரித்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். பட மூலாதாரம், Sanchit Khanna/Hindustan Times via Getty Images வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுவதைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பங்கேற்றிருந்தனர். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு ராம்லீலா மைதானத்தைச் சுற்றியிருந்த சாலைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தன. மைதானத்துக்குள் செல்லும் பாதைகளிலும் தொடர்ந்து மக்கள் வந்துகொண்டிருந்தனர். கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், மைதானத்துக்குள் செல்வதற்கு நாங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகளின் தொண்டர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். ஆனால், அங்கு கூடியிருந்த மக்களின் கவலை அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிப்பது என்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தங்களது வாக்குரிமை குறித்தும் பலர் கேள்விகளை எழுப்பினர். இந்தப் பேரணியில் பங்கேற்ற மென்பொருள் பொறியாளர் ஒருவர், தான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லை என்றும், ஆனால் இந்தப் பிரச்னை தனக்கு மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார். அதுகுறித்து அவர் கூறுகையில், "நான் ஒரு மென்பொருள் பொறியாளர். எந்தக் கட்சியுடனும் எனக்குத் தொடர்பில்லை. ஆனால், இந்தப் பிரச்னை மிகவும் தீவிரமானது என்பது எனக்குத் தெரியும். வாக்குத் திருட்டு நடந்திருந்தால், இதைவிடப் பெரிய பிரச்னை வேறு எதுவும் இருக்க முடியாது" என்றார். பிகாரை சேர்ந்த போராட்டக்காரர் ஒருவர், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்பதற்காகவே தான் இங்கு வந்ததாகக் கூறினார். பேரணியில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் ஒரே குரலில் பேசினர். வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளே அனைவரது பேச்சிலும் முக்கிய இடம்பிடித்திருந்தன. பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images இந்தப் பேரணியின் மூலம், தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தன. இருப்பினும், இந்தப் பேரணி கட்சிக்கு அளித்துள்ள அரசியல் ஊக்கம் மற்றும் எதிர்காலத் தேர்தல்களில் அதன் தாக்கம் குறித்து இரண்டு மூத்த பத்திரிகையாளர்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். சாலைகளும் மைதானமும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்ததாகவும், அரசுக்கு எதிரான செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதாகவும் மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா மதிப்பிடுகிறார். காங்கிரஸ் கட்சி தனது தொண்டர்களுடன் இணைந்து, மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளும் இந்தப் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் பின்னணியில் இந்த நிகழ்வை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா. அவரது கருத்துப்படி, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகப் பொதுவெளியில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்ற செய்தியை எதிர்க்கட்சிகள் அரசுக்கு அனுப்பியுள்ளன. நாடாளுமன்ற அவைக்குள் தங்களது கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத எதிர்க்கட்சிகள், இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சென்றுள்ளதாக அவர் கூறுகிறார். இதை எதிர்க்கட்சிகளின் அரசியலுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்வாக அவர் பார்க்கிறார். ஆனால், இந்தக் கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங் மாறுபட்ட கேள்வியை எழுப்புகிறார். அவரது கருத்துப்படி, இதற்கு முன்பும் எதிர்க்கட்சிகளின் பேரணிகளில் மக்கள் பெருமளவில் திரண்டுள்ளனர். ''அந்தக் கூட்டங்களுக்குப் பிறகு கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எவ்வாறு முன்னேறுகிறது, காங்கிரஸ் தனது நிலையை எந்த அளவுக்கு வலுப்படுத்திக்கொள்ள முடிகிறது என்பதுதான் உண்மையான சோதனை'' என்கிறார் அவர். மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங்கின் கருத்துப்படி, ஆளும் கட்சி மீது அதிருப்தி கொண்டிருப்பதும், அதற்குப் பதிலாக மற்றொரு கட்சியை மாற்றாக ஏற்றுக்கொள்வதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். அதுகுறித்து அவர் கூறுகையில், "அதிருப்தியில் இருக்கும் வாக்காளர் முன் உள்ள கேள்வி, தான் அதிருப்தி கொண்டிருக்கும் அரசுக்குப் பதிலாக யாரை நம்புவது என்பதுதான். ஒரு பேரணி அந்த அதிருப்திக்குக் குரல் கொடுக்கலாம். ஆனால், அதற்கு மாற்றாக இருக்கும் கட்சி மீது நம்பிக்கையை உருவாக்குவதும் அதே அளவுக்கு முக்கியமானது" என்றார். அவரது கருத்துப்படி, மக்கள் காங்கிரஸை ஓர் அரசியல் மாற்றாகப் பார்க்கத் தொடங்கினால் மட்டுமே, அரசுக்கு எதிரான அதிருப்தி அக்கட்சிக்குப் பயனுள்ளதாக இருக்கும். இதைச் சாதிக்க காங்கிரஸ் தனது அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான பலத்தை அதிகரிக்க வேண்டும். ''பேரணிகளை நடத்துவதாலோ, தலைவர்களை ஒன்றிணைப்பதாலோ மட்டும் இதைச் சாதித்துவிட முடியாது. இருப்பினும், தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்றாக ஒரு கட்சியை முன்னிறுத்துவதில் காங்கிரஸின் பங்கு முக்கியமானது'' என்று அவர் கூறுகிறார். அவரது கருத்துப்படி, வெவ்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து, ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை வழங்குவதற்கு பாஜக அல்லது காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சி அவசியமாகும். அதனால்தான் உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை அவர் குறிப்பிடுகிறார். இந்த மாநிலங்களில் காங்கிரஸ் வலுவான இருப்பைக் கொண்டிருக்காவிட்டால், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான சவாலை முன்னெடுப்பது கடினம் என்பது அவரது கருத்து. கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, கூட்டணிகளை வழிநடத்தும் அளவுக்கு காங்கிரஸ் வலுப்பெற வேண்டும் என்று அவர் கருதுகிறார். தேசிய அளவில் காங்கிரஸின் பங்கும், மாநிலங்களில் அக்கட்சியின் சொந்த பலமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் அவர் கூறுகிறார். அவர் கூறுகையில், "காங்கிரஸ் முன் இரண்டு கேள்விகள் உள்ளன. அரசுக்கு எதிரான அதிருப்திக்குக் குரல் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், அரசுக்கு மாற்றாகத் தங்களால் உருவெடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்" என்றார். ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பேரணி, இந்தியா கூட்டணியின் பதாகையின் கீழ் பல பெரிய மற்றும் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்தது. இத்தகைய சூழலில், பேரணி மேடையில் இந்தக் கூட்டணிக் கட்சிகளிடையே காணப்பட்ட ஒற்றுமை தேர்தல்களிலும் நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கருத்து ஒற்றுமை இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங், மேடையிலிருந்து கீழே இறங்கிய பிறகு, பிராந்தியக் கட்சிகள் தங்களது மாநில மற்றும் அரசியல் நலன்களைக் கவனத்தில் கொள்கின்றன என்றார். ''ஒரு பொதுவான பிரச்னைக்காக ஒன்றிணைவது அவர்களுக்குக் கடினமானதல்ல. ஆனால், தேர்தலில் தொகுதிகளை விட்டுக்கொடுப்பதோ அல்லது மற்றொரு கட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்வதோ அவ்வளவு எளிதானதல்ல. தலைவர்கள் சந்தித்துப் பேசுவதால் மட்டுமே அவர்களின் வாக்காளர்களும் தானாக ஒன்றிணைந்துவிட மாட்டார்கள்'' என்கிறார் அவர். எனவே, மேடையில் இடம்பெற்ற தலைவர்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மதிப்பிடாமல், மாநில அளவிலான ஒப்பந்தங்கள் மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறார். தேர்தல் ஒருங்கிணைப்புக்கான ஓர் உதாரணம் ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் கிடைத்துள்ளதாக அவர் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை எட்டின. அந்த ஒப்பந்தத்தின்படி காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் கிடைத்தன. இருப்பினும், மக்களவைத் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டைத் தீர்மானிக்காது" என்றார். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே எளிதில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்று மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங் கருதவில்லை. அந்தந்த மாநிலங்களில் வலுவாக இருக்கும் கட்சிகள், காங்கிரஸுக்கு எந்த அளவுக்கு இடமளிக்கும் என்பதே அவரது முக்கியக் கேள்வியாக உள்ளது. இதற்கு மாறாக, பிராந்தியக் கட்சிகள் வலுவாக இருக்கும் மாநிலங்களில் தேசியக் கட்சி அவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா கூறுகிறார். ஒரு மாநிலத்தில் குறைந்த முக்கியத்துவம் கொண்ட பங்கை ஏற்றுக்கொள்வது, எதிர்காலத்தில் அந்த தேசியக் கட்சியால் தனது நிலையை ஒருபோதும் வலுப்படுத்திக்கொள்ள முடியாது என்று அர்த்தமல்ல என்பது அவரது கருத்து. சில மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளைவிடக் குறைவான முக்கியத்துவம் கொண்ட பங்கை வகித்துவிட்டு, பின்னர் பெரிய கட்சியாக உருவெடுத்த பாஜகவை அவர் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார். 2004-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு ஆட்சியை இழந்ததையும், 2014-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததையும் மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா சுட்டிக்காட்டுகிறார். ஒரு கட்சி குறிப்பிட்ட காலகட்டத்தில் பலவீனமாகத் தோன்றுவதால், அதன் அரசியல் எதிர்காலம் நிரந்தரமாக முடிந்துவிடாது என்பதே அவரது வாதம். அரசியலில் கட்சிகளின் பலமும் அவற்றுக்கு இடையிலான உறவுகளும் மாறிக்கொண்டே இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா வாதிடுகிறார். எனவே, இன்று ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதை, அதன் எதிர்காலத்திலும் தொடரும் நிரந்தர நிலையாகக் கருதக்கூடாது என்கிறார். தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான பொதுவான கோரிக்கையை முன்வைத்து ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தன. ஆனால், இத்தகைய பொதுவான கோரிக்கையை முன்வைப்பதும், இந்தக் கட்சிகளிடையே பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தில் உடன்பாடு எட்டுவதும் ஒன்றா என்ற கேள்வி எழுகிறது. அரசியல் வேறுபாடுகள் இருப்பதை, கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டதற்கான ஆதாரமாகக் கருதவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா கூறுகிறார். ஒரு மாநிலத்தில் ஒன்றுக்கொன்று போட்டியாக இருக்கும் கட்சிகள், தேசியப் பிரச்னைகளுக்காக ஒன்றிணைய முடியும் என்பது அவரது கருத்து. இதற்கு தேசிய மற்றும் பிராந்தியப் பிரச்னைகளுக்கு இடையே ஒருமித்த கருத்து தேவைப்படுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா கூறுகிறார். இருப்பினும், காங்கிரஸின் சொந்த அரசியல் பலம் அதிகரிக்கும்போதுதான், இத்தகைய ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் அக்கட்சியின் பங்கு அதிகரிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங் கருதுகிறார். பட மூலாதாரம், Sanchit Khanna/Hindustan Times via Getty Images பேரணியில் வெளிப்பட்ட ஒற்றுமைக்கு மத்தியில், தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்னைகள் எதிர்க்கட்சித் தலைவர்களின் உரைகளில் முக்கியமாக இடம்பெற்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேடையில் பேசும்போது, "இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறினார். வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் புகார்கள், தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கக்கூடும் என்று எதிர்க்கட்சிகள் வாதிட்டன. உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவும் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். அவர், "பாரதிய ஜனதா கட்சியால் இனி நாட்டிடம் பொய் சொல்ல முடியாது. நாட்டின் மக்கள் இரண்டையும் புரிந்துகொண்டுவிட்டனர். இப்போது பாரதிய ஜனதா கட்சி தோல்வியடையும் கட்சியாகிவிட்டது" என்று கூறினார். பிபிசி நியூஸ் இந்தியிடம் பேசிய அகிலேஷ் யாதவ், "உத்தரப் பிரதேசத்தின் மூலமாகவே பாஜக நாட்டில் ஆட்சிக்கு வந்தது. இப்போது உத்தரப் பிரதேசத்தின் மூலமாகவே அது ஆட்சியிலிருந்து வெளியேறும்" என்று தெரிவித்தார். தேசிய அளவில் பாஜகவை எதிர்கொள்வது குறித்துப் பேரணியில் பேசப்பட்டது. அதேநேரத்தில், அகிலேஷ் யாதவின் கருத்து உத்தரப் பிரதேசத்தின் பங்கை வலியுறுத்தியது. மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தாவின் கருத்துப்படி, மாநிலக் கட்சிகளின் சொந்தப் பிரச்னைகளையும், தேசியப் பிரச்னைகளில் பொதுவான ஒருமித்த கருத்தையும் உள்ளடக்கிய தனித்துவமான செயல்திட்டத்தை இந்தக் கூட்டணி உருவாக்க வேண்டும். மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங்கின் பார்வையில், மாநிலங்களில் காங்கிரஸ் தனது பலத்தை அதிகரித்தால் மட்டுமே அக்கட்சியின் பங்கு வலுப்பெறும். இந்தியா கூட்டணியின் இந்தப் பேரணியின் முக்கிய நோக்கம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டமாகும். வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின்போது முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது தேர்தல் நடைமுறையின் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அக்டோபர் 2ஆம் தேதி போராட்டங்கள் தொடங்கின. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடைபெற்றது. நவம்பர் 1ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டப் பேரணியுடன் இந்தப் போராட்டம் மிகப்பெரிய அரசியல் ஆர்ப்பாட்டமாக உருவெடுத்தது. ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான போராட்டம் என்று எதிர்க்கட்சிகள் இதைக் குறிப்பிடுகின்றன. சில தலைவர்கள் இதனை "இரண்டாவது சுதந்திரப் போராட்டம்" என்றும் அழைத்துள்ளனர். எஸ்ஐஆர் தொடர்பான தங்களது குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா மதிப்பிடுகிறார். இந்த விவகாரத்தில் காங்கிரஸும் ராகுல் காந்தியும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், இது எதிர்க்கட்சிகளின் அரசியலுக்கு வலுசேர்த்துள்ளதாகவும் ஷரத் குப்தா கூறுகிறார். மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங் கருத்துப்படி, அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், தங்களது குறைகளை எதிர்கொள்ளும் திறன் காங்கிரஸுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் உள்ளது என்ற நம்பிக்கையைப் பெற வேண்டும். எனவே, இந்தப் பேரணிக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான தயாரிப்புகள் அவரைப் பொறுத்தவரை முக்கியமானவை. வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் நடைமுறை தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையமும் பாஜகவும் தொடர்ந்து நிராகரித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைப் பாஜக கேள்விக்குள்ளாக்கி வருகிறது. நவம்பர் 1ஆம் தேதியைப் பேரணிக்கான நாளாகத் தேர்ந்தெடுத்ததன் மூலம், 1984 சீக்கியர் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களில் ராகுல் காந்தி உப்பைத் தூவியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை சண்டிகரில் குற்றம்சாட்டினார். குழப்பத்தை ஏற்படுத்துவது, தவறான தகவல்களைப் பரப்புவது, நாடாளுமன்றத்தை முடக்குவது ஆகியவற்றிலும் எதிர்க்கட்சிகள் ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டினார். ராம்லீலா மைதானத்தில் திரண்டிருந்தவர்களைப் பொறுத்தவரை, தங்களது வாக்குரிமை மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்தப் பேரணி அமைந்தது. இதனை ஒரு பெரிய இயக்கமாக மாற்ற எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் இருப்பையும் செயல்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பேரணி முக்கியமானது என்று மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா கருதுகிறார். காங்கிரஸ் தனது பலத்தை அதிகரித்து, கூட்டணியை ஒரு தேர்தல் மாற்றாக உருவாக்குவதே அக்கட்சியின் அடுத்தகட்டப் பணியாக இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் ராம்கிருபால் சிங் கூறுகிறார். ராம்லீலா மைதானத்தைச் சுற்றியிருந்த மக்கள் பேரணியில் திரண்டிருந்த கூட்டத்தின் அளவைக் கணிக்க முயன்றனர். பல பத்திரிகையாளர்களும் அங்கிருந்த நிலவரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் பேரணிகளில் இவ்வளவு பெரிய கூட்டத்தைத் தாங்கள் பார்த்ததில்லை என்றே பெரும்பாலானோர் கருதினர். ராகுல் காந்தியின் உரை முடிந்ததும் பேரணியும் நிறைவடைந்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே ராம்லீலா மைதானம் காலியானது. ''வாக்குத் திருட்டு'' என்ற விவகாரத்தைத் தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு பிரச்னையாக எதிர்க்கட்சிகளால் மாற்ற முடியுமா என்ற கேள்வி இன்னும் நீடிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை