தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிக்க திட்டம் தீட்டியது யார்? 6 கேள்விகள்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிக்க திட்டம் தீட்டியது யார்? 6 கேள்விகள்

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பித்த விவகாரத்தில், லிங்க பிரசாத் என்ற கைதி மூளையாக செயல்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. "சம்பவம் நடந்த அன்று (அக்டோபர் 26) மாலை, சிறையில் இருந்த சில கைதிகள் தங்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கேட்ட கைதியான லிங்க பிரசாத் சிறையில் இருந்து தப்பிச் செல்லலாம் என்கிற யோசனையை பிற கைதிகளிடம் முன் வைத்தார்" என தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிடாரி கூறினார். தேனி மாவட்டத்தின் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 17 கைதிகள் ஒரே சமயத்தில் தப்பிச் சென்ற நிகழ்வு இந்தியா முழுவதும் பேசும்பொருளான நிலையில், அந்த '17 கைதிகளையும் இரண்டு நாட்களுக்குள் பிடித்துவிட்டதாக' தமிழக காவல்துறை நேற்று (அக்டோபர் 28) தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் குறித்த 6 முக்கிய கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். "இந்தச் சம்பவம் திங்கள்கிழமை (அக்டோபர் 26) இரவு 10 மணி அளவில் நடைபெற்றது. 15 நிமிடங்களில், அதாவது 10:15 மணிக்கு எனக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நடவடிக்கைகள் தொடங்கின" என பிபிசி தமிழிடம் கூறினார் தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிடாரி. "சிறையிலிருந்து கிடைத்த முதல் தகவல் என்பது 'தேனி மாவட்டச் சிறையில் ஏதோ ஒரு தவறு நடந்துள்ளது, பேக் அப் (கூடுதல் காவலர்கள்) அனுப்புங்கள்' என்பதே. சிறைக் காவலர்கள் தாக்கப்பட்டிருந்ததால், முழுமையான விவரங்கள் தெரிய சற்று நேரமானது. இருப்பினும், 11 மணிக்கு உள்ளாகவே அனைத்து காவல்துறை உயரதிகாரிகளுக்கும் முழு விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டன. அடுத்த சில மணிநேரங்களில் கைதிகளின் புகைப்படங்களுடன் கூடிய விவரங்கள் வெளியிடப்பட்டன" என்கிறார் அவர். இந்த இரண்டு நாட்களில் பரபரப்பாக நடைபெற்ற தேடுதல் நடவடிக்கைகளில் கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன என்றும், வனப்பகுதியில் தேடுதல் பணிகளை மேற்கொள்ள 5 அதிரடிப்படை குழுக்கள் வரவழைக்கப்பட்டன, தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவ தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 4 பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டன என்றும் தமிழக காவல்துறை தெரிவித்தது. ஆனால், சம்பவம் நடந்தபோது சிறையில் இருந்த காவலர்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் இல்லை. End of அதிகம் படிக்கப்பட்டது 'சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் கைதிகள் நடத்திய தாக்குதல்களில் சிறைக் காவலர்கள், அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்தனர் என்றும், குறிப்பாக தங்கபாண்டி என்ற இரண்டாம் நிலை சிறைக்காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்' என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, தேனி மாவட்டச் சிறையைச் சேர்ந்த 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சிறைத்துறை செய்திக் குறிப்பு தெரிவித்தது. தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறைச்சாலையில் நேரில் (அக்டோபர் 27) ஆய்வு மேற்கொண்டார். கைதிகள் தப்பிச் சென்றதற்கு 'மனிதத் தவறே' காரணம் என அவர் தெரிவித்தார். பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு "சிறையின் உள்ளே பல பிளாக்குகள் உள்ளன. இதில் ஒரு பிளாக்கில் இருந்த சில கைதிகள் மட்டுமே தப்பித்தனர். அவர்கள் தப்பித்த சில நிமிடங்களில் சிறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் காவல்துறை கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. எனவே சிறையில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது என கூறிவிட முடியாது. இது குறித்து சிறைத்துறையின் சார்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்கிறார் விஜயேந்திர பிடாரி. இந்த சம்பவத்திற்கு பின்னர் தேக்கம்பட்டி சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், சிறையின் 3 கண்காணிப்புக் கோபுரங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, இந்தச் சம்பவத்திற்கு பிறகு, "கண்காணிப்புக் கோபுரங்களில் பணியில் இருக்கும் சிறை வார்டன்கள், தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்போதோ அல்லது கைதிகள் தப்பிக்கும் சம்பவங்கள் நிகழும்போதோ துப்பாக்கிச் சூடு நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளனர்" என்று சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார் என 'தி இந்து' ஆங்கில நாளிதழின் செய்தி கூறுகிறது. ஆனால், கைதிகள் தப்பித்தபோது ஆயுதம் ஏந்திய காவலர்கள் பணியில் இருந்தார்களா? என்பது குறித்து தகவல்கள் இல்லை. "இத்தகைய மாவட்டச் சிறைகளில் இரவு வேளைகளில் 10 அல்லது அதற்கு குறைவான காவலர்களே பணியில் இருப்பார்கள். ஒரு பிளாக்கிற்கு ஒரு காவலர் தான் இருப்பார். இது வழக்கமான ஒன்று தான்" என்கிறார் மதுரை மத்திய சிறையின் உதவி சிறை அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற நல்லதம்பி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வழக்கமாக சிறையின் வெளி நுழைவாயில் பகுதியில் சிறியது, பெரியது என இரண்டு கதவுகள் இருக்கும். சிறிய கதவிற்கு ஒரு பூட்டும், பெரிய கதவிற்கும் ஒரு பூட்டும் பயன்படுத்தப்படும். சிறை அதிகாரி தனது பணி முடிந்து செல்லும்போது சாவிகளை வீட்டிற்கு எடுத்துச் செல்வார்." என்கிறார். ஆனால், "தற்போது 24 மணிநேரமும் கைதிகளை சிறைகளுக்கு கொண்டுவரும் நடைமுறை இருப்பதால், இந்த வழக்கங்கள் பின்பற்றப்படுவதில்லை" என்கிறார் அவர். இந்தச் சம்பவத்தில் தப்பித்தவர்கள் அனைவருமே விசாரணைக் கைதிகள் என்று தேனி மாவட்ட காவல்துறை தெரிவித்தது. "26.10.2026 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில், தேனி மாவட்டச் சிறையில் இருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில், 7 பேர் கொலைக் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்" என்று தேனி மாவட்ட காவல்துறை அறிக்கை கூறுகிறது. மேலும், ''6 பேர் வழிப்பறி குற்றங்களில் தொடர்புடையவர்கள், 2 பேர் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் தொடர்புடையவர்கள், பிற இருவர் ஆயுதம் வைத்திருத்தல், மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள்'' இதில் கருப்பசாமி (எ) மதன், ராஜ்குமார், திருப்பதி, பொன்முத்துச்செல்வம், மீனாட்சிசுந்தரம், நிசாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக்ராஜா, பிரசாந்த் (எ) லிங்க பிரசாத், ராஜா சிக்கந்தர், சோலைமுகிலீஸ்வரன் ஆகிய 11 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். பிற கைதிகள் சிவகங்கை, இராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். "எனவே தான் கைதிகள் தப்பித்தவுடன் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டன. மதுரை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையத்தில் கூட சோதனைகள் நடத்தப்பட்டன" என்கிறார் விஜயேந்திர பிடாரி. "சம்பவம் நடந்த அன்று (அக்டோபர் 26) மாலை, சிறையில் இருந்த சில கைதிகள் தங்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கேட்ட சக கைதியான லிங்க பிரசாத் சிறையில் இருந்து தப்பிச் செல்லலாம் என்கிற யோசனையை பிற கைதிகளிடம் முன் வைத்தார்" என தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிடாரி கூறுகிறார். "இது அன்று மாலை உடனடியாக தீட்டப்பட்ட ஒரு திட்டம் என்றே தெரிகிறது." என்றும் அவர் கூறுகிறார். தப்பித்துச் சென்ற 17 கைதிகளில், அக்டோபர் 27ஆம் தேதி பிற்பகலில் ஐந்தாவது நபராக பிடிபட்ட லிங்க பிரசாத் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். 'சிறையில் இருந்து திங்கள்கிழமை இரவு தப்பிய லிங்க பிரசாத், கண்டமனூர் செல்லும் சாலையில் தனது ஆட்டோவில் ஏறியதாக' சின்னக்காளை என்பவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். அதன் பின்னர், ஆட்டோவைச் சோதனை செய்வதற்காகக் காவலர் ஒருவர் வழிமறித்துள்ளார். ஆட்டோவில் இருந்தவர் தப்பியோடிய கைதி என்பது தெரியவந்ததும், அதே ஆட்டோவில் அவரைச் சிறைக்குக் காவலர் அழைத்துச் சென்றார். பின்னர், லிங்க பிரசாத் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். "தப்பிச் சென்றவர்களுக்கு பெரிய திட்டம் எதுவும் இருக்கவில்லை. லிங்க பிரசாத் உள்ளிட்ட சில கைதிகள் தப்பிக்க எடுத்த முயற்சிகளை, வேறு சில கைதிகளும் பயன்படுத்திக்கொண்டனர்" என்கிறார் விஜயேந்திர பிடாரி. இது குறித்து விளக்கிய விஜயேந்திர பிடாரி, "சிறைக்கு அருகில் ஒரு ரயில் பாதை செல்கிறது. எனவே அவர்களது அதிகபட்ச நோக்கம் என்பது எப்படியாவது அதில் வரும் ரயிலில் ஏறி தப்பிக்க வேண்டும் என்பது. ஆனால், சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் சிறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவலர்கள் சோதனையில் ஈடுபட தொடங்கினர். எனவே கைதிகளில் சிலர் அருகில் உள்ள கிராமங்களை நோக்கியும், சிலர் வனப்பகுதிகளை நோக்கியும் சென்றனர்" "சிறையைச் சுற்றியுள்ள கிராமங்களை நோக்கி செல்லும் சாலைகளில், ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் தற்காலிக சோதனைச் சாவடிகள் உருவாக்கப்பட்டன. எனவே அக்டோபர் 27 பிற்பகலுக்குள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்" என்கிறார். இந்த தேடுதல் நடவடிக்கைகளில், கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், டிரோன்கள் மூலமாகவும் சுற்றுப்புற பகுதிகளில் தீவிரமாகத் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது என தேனி மாவட்ட காவல்துறை தெரிவிக்கிறது. குறிப்பாக, அக்டோபர் 27 அன்று மாலையில், சிறையின் பின்புறம் உள்ள அமச்சியாபுரம் வனப்பகுதியில் பதுங்கியிருந்த 8 கைதிகளை காவல்துறையினர் டிரோன் கண்காணிப்பு உதவியுடன் கண்டறிந்து பிடித்தனர். இதன் மூலம் இந்தச் சம்பவம் நடந்து 24 மணிநேரத்திற்குள் 13 கைதிகளை பிடித்ததாக தமிழக காவல்துறை தெரிவித்தது. "அந்த 8 பேரும் காட்டில் எந்தத் திசையில் நகர்கிறார்கள் என்பதை 3 டிரோன்கள் மூலம் உறுதி செய்தோம். அப்பகுதியை சுற்றி வளைத்தோம். தாங்கள் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்த அவர்கள், ஒருகட்டத்தில் தப்பிக்கும் முயற்சியை கைவிட்டு, ஒரு இடத்தில் பதுங்கி இருந்தார்கள். அவர்களை கைது செய்தோம்" என்கிறார் விஜயேந்திர பிடாரி. இந்த 17 பேரில், இறுதியாக கைது செய்யப்பட்டது மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் திருப்பதி. "அவர்கள் இருவரும் அமச்சியாபுரம் வனப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால், மதுரையில் உள்ள அவர்களது வீடுகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். எங்கும் தப்பிச் செல்ல முடியாது என்பதை உணர்ந்த அவர்கள் சோர்ந்துவிட்டனர். பின்னர் அவர்களும் பிடிக்கப்பட்டனர்" என்கிறார் விஜயேந்திர பிடாரி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை