தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது முதல் பிடிபட்டது வரை - காவல்துறை வெளியிட்ட புதிய தகவல்கள்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது முதல் பிடிபட்டது வரை - காவல்துறை வெளியிட்ட புதிய தகவல்கள்

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றது குறித்து, வழக்கின் புலனாய்வு அதிகாரியான ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி விஷ்ணுபிரியா செய்தியாளர்களிடம் விவரித்துள்ளார். கானாவிலக்கு காவல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிறையில் இருந்து சம்பவம் நடந்த அன்று இரவு 10 மணியளவில் சிறைக் கைதிகள் தப்பிச் சென்றதாக சிறைத்துறையில் இருந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். இதையடுத்து, அனைத்து சோதனைச் சாவடிகளையும் அலெர்ட் செய்ததாகக் கூறிய அவர், "அடுத்த 15 நிமிடத்தில் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அங்கு 17 பேர் சிறையில் இருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது" என்கிறார். முதல் 24 மணிநேரத்தில் 13 பேரை கைது செய்துவிட்டதாகவும் 36 மணிநேரத்தில் தப்பிச் சென்ற 17 பேரையும் காவல்துறை கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார். "சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 5 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகள் உள்ளன" என்கிறார் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா. கைதிகள் தப்பிச் சென்றதன் பின்னணியில் லிங்க பிரசாத் என்ற கைதி இருந்துள்ளதாகக் கூறிய அவர், "தப்பிக்கும் முயற்சியில் ஏன் ஈடுபட்டனர் என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது" எனக் கூறினார். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவர முடியாத காரணத்தாலும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருந்து வெளியில் வருவது சிரமம் என்பதாலும் கைதிகள் தப்பித்ததாக அவர் விவரித்தார். தப்பிச் செல்லும்போது சிறைக் காவலரின் நகையைப் பறித்துச் சென்றதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "நகையைப் பறித்துவிட்டுச் சென்றது உண்மைதான்" எனத் தெரிவித்தார். End of அதிகம் படிக்கப்பட்டது "தப்பிச் செல்லும்போது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கரண்டியை வைத்துத் தாக்கியுள்ளனர். அடிப்பட்ட சிறை வார்டன் தற்போது நன்றாக இருக்கிறார். இவர்களில் பலரும் செருப்பில்லாமல் ஓடியுள்ளனர்." என்கிறார் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா. கைதிகளைக் கைது செய்வதில் தேனி மாவட்ட புவியியல் அமைப்பு சவால் நிறைந்ததாக இருந்ததாகக் கூறுகிறார், டி.எஸ்.பி விஷ்ணுபிரியா. இதுகுறித்து விவரித்துள்ள அவர், "தேனியின் புவியியல் அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கும். காடுகளும் தொடர் மலைகளும் உள்ளன. குடை போன்ற மரங்கள் உள்ளதால் பதுங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தன" என்கிறார். புவியியல் அமைப்பு காரணமாக சம்பவம் நடந்த நாளில் ஒருவரை மட்டுமே கைது செய்ய முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளைப் பிடிப்பதற்கு 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "கிராமத்து மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டிருந்தது. மதுரை எல்லையில் உள்ள உசிலம்பட்டி, திண்டுக்கல் எல்லையில் உள்ள வத்தலக்குண்டு மற்றும் இடுக்கி எல்லைகள் அலெர்ட் செய்யப்பட்டன" என்கிறார். மறுநாள் டிரோன் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறிய அவர், "அன்று மாலை 11 பேர் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்கு உடனடியாக சென்று அவர்களைக் கைது செய்தோம்" எனக் கூறினார். "மற்ற கைதிகள் தேனியை விட்டுச் செல்லவில்லை என்பது தெரிந்தது. நேற்று (அக்டோபர் 28) காலை 2 பேர் பிடிபட்டனர். அடுத்து, 2 பேர் கேரளாவுக்கு தப்பிச் செல்லக் காத்திருக்கும்போது கூடலூர் நெடுஞ்சாலையில் கைது செய்யப்பட்டனர்" எனவும் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 17 கைதிகளும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யும் பணியில் சிறைத்துறை ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து விவரித்த டி.எஸ்.பி விஷ்ணுபிரியா, " இவர்களில் நான்கு பேரை பாளையங்கோட்டை சிறையிலும் நான்கு பேரை கோவை சிறையிலும் மூன்று பேரை கடலூர் சிறையிலும் ஆறு பேரை சேலம் சிறையிலும் சிறைத்துறை நிர்வாகம் மாற்ற உள்ளது" என்கிறார். "இது கூட்டு முயற்சி" எனக் கூறிய டி.எஸ்.பி விஷ்ணுபிரியா, "தேனி மற்றும் ஆண்டிப்பட்டி மக்கள் போதுமான அளவு உதவி செய்தனர். அவர்களின் ஒத்துழைப்பு இந்த வழக்கில் முக்கியமானதாக இருந்தது" எனக் கூறினார். "மக்களிடம் அவர்கள் உதவி கேட்கும்போதெல்லாம் எங்களுக்குத் தகவல் வந்தது. கைதிகளுக்கு வழியே தெரியவில்லை. சாப்பாடு, தண்ணீர் கேட்டது போன்ற காரணங்களால் நான்கு பேரை கைது செய்வது எளிதாக இருந்தது" என அவர்கள் தெரிவித்தனர். தப்பிச் செல்வதற்கான பின்னணி குறித்துப் பேசிய அவர், " புலனாய்வில் கைதி லிங்கபிரசாத் தொடர்பு பற்றியே மற்றவர்கள் கூறினர். 'எளிதில் பிணையில் வர முடியாது' என அவர் கூறியுள்ளார். ஒரு கைதியின் மனைவிக்கு வளைகாப்பு உள்பட சில காரணங்கள் இருந்துள்ளன" என்கிறார். சிறையில் இருந்து தப்பிச் செல்லும் திட்டத்தின் பின்னணியில் இருந்த லிங்க பிரசாத் மீது 26 வழக்குகள் உள்ளதாகவும் அதில் 3 கொலை வழக்குகள் எனவும் அவர் தெரிவித்தார். தப்பிச் செல்லும் கைதிகளுக்கு சிலர் பணம் கொடுத்து சில திட்டங்களை வகுத்துக் கொடுத்ததாக வெளியான செய்திகள் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "இதேபோன்று பல ஊகங்கள் வெளிவந்தன. அதுபோன்ற எந்தத் தகவலும் இல்லை. எங்களுக்கு கால அவகாசம் உள்ளது. மேலதிக விசாரணையில் மற்ற விவரங்கள் தெரியவரும்" எனக் கூறினார் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை