அமைச்சர் நிர்மல் குமார் | கோப்புப் படம் சென்னை: “திமுக முன்னாள் அமைச்சர்கள் குறிவைக்கப்படவில்லை. தேர்தலில் தோற்றுப்போனவர்களை நாங்கள் ஏன் பழிவாங்க வேண்டும்? மக்களே அவர்களுக்கு தீர்ப்பு கொடுத்துவிட்டனர்” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக ஆட்சிக் காலத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடந்த அனைத்து குற்றங்களையும் மூடி மறைக்க தான் பார்த்தார்கள். அனைத்து வழக்குகளும் நீதிமன்றம் மூலம்தான் சிபிஐ விசாரணைக்கு சென்றது. ஜெம் வீரமணி வழக்கு கூட இரண்டு வருடங்கள் கட்டப்பஞ்சாயத்து நடந்த வழக்குதான். தவெக ஆட்சி காலத்தில் யார் தவறு செய்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர்கள் குறிவைக்கப்படவில்லை. வேலைவாங்கி தருவதாக மோசடி நடந்துள்ளது. ஃபைலை திறங்கள் என்கின்றனர். ஆனால் ஃபைலை திறந்தவுடன் நீதிமன்றத்தில் தடை பெற்று விடுகிறார்கள். அவர்கள் தவறிழைக்கவில்லையெனில் சட்டப்படி எதிர்கொள்ளலாமே. சிறைத் துறையில் நிறைய சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணியாளர்கள் பற்றாக்குறை இருந்தது. அதுவும் சரிசெய்யப்பட்டுள்ளது. திமுகவில் அங்கம் வகித்த அமைச்சர்கள் தவறு செய்தால், அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? பல பள்ளிகளில் மிரட்டி பணம் வாங்கியுள்ளனர். நாங்கள் எதுவும் கேள்வி கேட்க கூடாதா? அப்போது எதற்கு இந்த அரசு? தேர்தலில் தோற்றுப்போனவர்களை நாங்கள் ஏன் பழிவாங்க வேண்டும்? மக்களே அவர்களுக்கு தீர்ப்பு கொடுத்துவிட்டனர். கல்வி நிறுவனங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். மேலும், பேராசிரியர் கலையரசன் கைது குறித்த கேள்விக்கு, “இது உள்ளூர் காவல் நிலையத்தில் நடந்த தவறு. நானும், சில அமைச்சர்களும் அவரிடம் பேசியுள்ளோம்” என்ரு அவர் கூறினார்.
“தேர்தலில் தோற்றவர்களை நாங்கள் ஏன் பழிவாங்க வேண்டும்?” - அமைச்சர் நிர்மல் குமார்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗