தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் ஞானேஷ் குமார் மீது விசாரணை நடத்த கார்கே வலியுறுத்தல்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் ஞானேஷ் குமார் மீது விசாரணை நடத்த கார்கே வலியுறுத்தல்

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இண்டியா கூட்டணி நடத்திய ‘பொது கண்டன விசாரணை’ நிகழ்வு, டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் இதற்கு தலைமை வகித்தார். மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கபில் சிபல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் நேரடி உத்தரவுகளுக்கு இணங்க தேர்தல் ஆணையத்தை நடத்தி வருகிறார். ஏழு மாதங்களுக்கு முன்பு, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 193 எம்பிக்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்குவதற்கான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தனர். ஆனால், எங்களது அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே, இன்று நாங்கள் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம், ஓர் அரசியலமைப்பு அமைப்பின் கண்ணியத்தைக் காக்கும் நோக்கம் கொண்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எங்களுக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. தேர்தல் ஆணையம் அரசியலமைப்பின் உணர்வுக்கு ஏற்ப பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. அப்போதுதான், சாமானிய மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தொடரும். பாதிக்கப்படக்கூடிய பிரிவினர், பெண்கள், இளைஞர்களின் வாக்குரிமை டெல்லியில் அமர்ந்திருக்கும் யாரோ ஒருவரால் கணினி மூலம் ரகிசியமாக நீக்கப்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். 2014 முதல் அதிகாரத்தைக் கைப்பற்றவும் தக்கவைத்துக் கொள்ளவும் அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டுள்ளது. இதற்காக சாத்தியமான அனைத்து சதித் திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் தங்கள் பக்கம் இழுத்தனர்; அரசியல் கட்சிகளை உடைத்தனர்; அரசாங்கங்களை கவிழ்த்தனர். மேலும், தேர்தல் பத்திரங்கள், அமலாக்க இயக்குநரகம், சிபிஐ ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்ளனர். இப்போது அவர்கள் வாக்குகளையே திருடுகின்றனர். இத்தகைய வாக்குத் திருட்டுக்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் நம்மிடம் உள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் 2023 காரணமாகவே ஞானேஷ் குமாரால் இந்த திருட்டைச் செயல்படுத்த முடிகிறது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 145 எம்பிக்களை இடைநீக்கம் செய்த பிறகு 2023 டிசம்பரில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் அவகரமானகரான, வெட்கக்கேடான செயலாகும். இந்த சட்டம் தேர்தல் ஆணையர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு பாதுகாப்பு கவசத்தை வழங்குகிறது. இத்தகைய பாதுகாப்பு இந்திய குடியரசுத் தலைவருக்கோ, இந்திய தலைமை நீதிபதிக்கோ கூட வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை