தேசிய மாநாட்டு கட்சியில் கிளர்ச்சி - அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேர் கட்சி தலைமைக்கு 15 நாள் கெடு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
தேசிய மாநாட்டு கட்சியில் கிளர்ச்சி - அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேர் கட்சி தலைமைக்கு 15 நாள் கெடு!

அமைச்சரவை விரிவாக்கத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்கள் ஃபரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அக்கட்சியின் எம்எல்ஏக்கள் 17 பேர், கட்சிக்குள் நிலவும் சிக்கல்களை 15 நாட்களுக்குள் தீர்க்க கெடு விதித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 90 உறுப்பினர்களில், 50 உறுப்பினர்களின் ஆதரவுடன் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக பதவி வகித்து வருகிறார். தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 42 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக். 27 அன்று அமைச்சரவையை விரிவுபடுத்திய உமர் அப்துல்லா, அமைச்சர்களின் எண்ணிக்கையை ஆறில் இருந்து ஒன்பதாக உயர்த்தினார். அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பிறகு பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், தங்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கைசர் ஜம்ஷீத் லோன் ஸ்ரீநகரில் உள்ள தனது இல்லத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். நேற்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில், முபாரக் குல், நசீர் குரேசி, அப்துல் மஜீத் லார்மி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். தானமண்டி தொகுதி சுயேட்சை எம்எல்ஏ முசாபர் இக்பால் கானும் இதில் பங்கேற்றார். கூட்டத்திற்குப் பிறகு தி இந்து நாளிதழிடம் இது குறித்துப் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், “கூட்டத்தில் ஒரு கூட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது கட்சியின் தலைமைக்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்க்க 15 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. கட்சிக்குள் ஒரு சிறிய குழுவின் ஆதிக்கம் உள்ளது. கட்சியின் செயல்பாட்டில் இத்தகைய கலாச்சாரமே மேலோங்கியுள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்துக்கு முன்னதாக கட்சியின் எம்எல்ஏக்களுடன் ஆலோசனைகள் எதுவும் நடத்தப்படவில்லை. இது கட்சியின் ஆரோக்கியமற்ற கலாச்சாரம். இது கட்சிக்கு நன்மை பயக்கும் வகையிலான ஒரு கிளர்ச்சியாகும்.” என்று தெரிவித்தார். தற்போதைய நிலையில் கட்சியைப் பிளவுபடுத்தும் எந்த முயற்சியும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் செயல்பாடுகளில் உள்ள சிக்கல்களை ஃபரூக் அப்துல்லா கவனத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனிடையே, தேசிய மாநாட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகா சையத் ருஹுல்லா, நவ.3-ம் தேதி எம்பி பதவியை ராஜினமா செய்யவும், கட்சியில் இருந்து விலகவும் உள்ளதாக அறிவித்துள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கவும், மக்களின் உரிமைகளுக்காகப் போராடவும் முதல்வர் உமர் அப்துல்லா தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய காஷ்மீரில் தான் நடத்த உள்ள பொதுக்கூட்டத்துக்கு அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை