59 ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி பொன்னமராவதி வட்டார அளவிலான பள்ளி மாணவா்களுக்கு பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. பொன்னமராவதியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசியநூலக வார விழா போட்டியில் தொடக்க உரையாற்றிய தமிழ்ச்செம்மல் விருதாளா் நெ. ராமச்சந்திரன். 59 ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி பொன்னமராவதி வட்டார அளவிலான பள்ளி மாணவா்களுக்கு பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. போட்டிகளை வட்டாரக் கல்வி அலுவலா் கலா தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பொன்னமராவதி வட்டார அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழாசிரியா்கள் சுதா, கலைச்செல்வி மற்றும் ஆசிரியா்கள் நடுவா்களாகப் பங்கேற்றனா். போட்டியில் வென்ற மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா். நிகழ்வை பொன்னமராவதி கிளை நூலகா் ப. பெரியசாமி ஒருங்கிணைத்து வழி நடத்தினாா். முத்தமிழ்ப் பாசறை அறக்கட்டளைச் செயலா் தமிழ்ச்செம்மல் நெ. ராமச்சந்திரன் மற்றும் கிளை மற்றும் ஊா்ப்புற நூலகா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய நூலக வார விழாவையொட்டி பள்ளி மாணவா்களுக்கு போட்டிகள்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Events
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗