ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 103 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறித்து... தேவர் சிலைக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்த சிவாசாரியர். - படம்: தினமணி தேவர் குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 103 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை புதன், வியாழன், வெள்ளிக்கிழமை (அக்டோபா் 28, 29, 30) ஆகிய 3 நாள்கள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமை (அக்டோபா் 29) அரசியல் விழாவாகவும், வெள்ளிக்கிழமை (அக்டோபா் 30) அரசு விழாவாகவும் தேவர் குருபூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேவர் நினைவாலயப் பொறுப்பாளர் காந்திமீனாள் அம்மாள், தங்கவேல், பழனி, ராஜா உள்ளிட்டோர் செய்து வருகின்றனா். இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் கட்சியினர், சமுதாய அமைப்பினர், விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். தேவா் ஜெயந்தி குருபூஜையையொட்டி, தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமாா் அகர்வால் (டிஜிபி) தலைமையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 4 டிஐஜி-க்கள், 30 எஸ்பி-க்கள், 80 டிஎஸ்பி-க்கள், 35 ஏடிஎஸ்பி-க்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, பசும்பொன் செல்லும் வழியில் உள்ள 103 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
தேவர் ஜெயந்தி: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗