தேவர் திருமகனாரின் தியாகத்தையும், பெருமையையும் நினைவு கூர்வோம்! - அன்புமணி ராமதாஸ்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தேவர் திருமகனாரின் தியாகத்தையும், பெருமையையும் நினைவு கூர்வோம்! - அன்புமணி ராமதாஸ்

தேவர் திருமகனார் மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களும், பெற்ற வெற்றிகளும் ஏராளம் என அன்புமணி கூறியிருப்பது குறித்து... பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் - எக்ஸ் விடுதலைப் போராட்ட வீரரும், சமூக விடுதலைப் போராளியுமான தேவர் திருமகனாரின் குருபூசை நாளில் அவரின் தியாகத்தையும், பெருமையையும் நினைவு கூர்ந்து போற்றுவோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கும் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தேவர் திருமகனாரின் தியாகத்தையும், பெருமையையும் நினைவு கூர்வோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஏராளமான பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டவரும், தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று அறிவித்து அதன்படி வாழ்ந்தவருமான விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துஇராமலிங்கத் தேவரின் 119-ஆம் பிறந்தநாளும், 64-ஆம் குருபூசை நாளும் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை போற்றி வணங்குகிறேன். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும், தமிழ்நாட்டு அரசியலையும் தேவர் திருமகனாரை தவிர்த்து விட்டு எழுத முடியாது. காந்தியின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் பயணம் செய்த தேவர் பெருமகனார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களையே தம்மை வழிநடத்திச் செல்லும் தளபதியாக கருதினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் நேதாஜியை வீழ்த்த காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் முயன்ற போது, தென்னிந்தியா முழுவதும் ஆதரவைத் திரட்டி நேதாஜியை வெற்றி பெறச் செய்த பெருமை தேவர் பெருமகனாருக்கு உண்டு. இந்திய விடுதலைக்காக காங்கிரசின் அங்கமாகவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சீடராகவும் இருந்து அவர் நடத்திய போராட்டங்கள் வியக்கத்தக்கவை. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். உள்ளூர் மக்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் காப்பதற்காக அவர் நடத்திய போராட்டங்கள் பட்டியலிட முடியாதவை. சென்னை மாகாணத்தில் ஒரு சமூகத்தையே பிறப்பின் அடிப்படையில் குற்றவாளிகளாக்கும் குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சியிலும், விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு துணை நின்றது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களும், பெற்ற வெற்றிகளும் ஏராளம். தமிழ்நாட்டில் அனைத்து தேசியக் கட்சிகளாலும், அனைத்து மாநிலக் கட்சிகளாலும் போற்றப்படும் பெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான். அதற்கு காரணம் நாட்டின் விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் தான். அததகைய மகத்தான வரலாறு கொண்ட அவரது தியாகத்தையும், பெருமைகளையும் இன்றைய தலைமுறையினருக்காக நினைவு கூர்ந்து போற்றுவோம்! என கூறியுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை