தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 83.65 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்

📅 📍 Thanjavur, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 83.65 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ஏற்பாட்டில் ஷோகோ நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் மூலம் ரூ. 83.65 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 83.65 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வியாழக்கிழமை மருத்துவக்கல்லூரி முதல்வா் இ. மணிமேகலாவிடம் வழங்கிய மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, ஷோகோ நிறுவன இயக்குநா் ஜி.என். பாலகிருஷ்ணன். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ஏற்பாட்டில் ஷோகோ நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் மூலம் ரூ. 83.65 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நோயாளிகளுக்கு ஊசி மருந்து அளவுகள் மற்றும் எச்சரிக்கையை வயா்லெஸ் முறையில் கண்காணிக்கும் 50 இயந்திரங்கள், உடல் உள்ளுறுப்புகளிலுள்ள நோயைத் துல்லியமாகக் கண்டறியும் திசு ஆய்வுக் கருவி, 30 படுக்கைகள் வசதி கொண்ட இ-ஐசியு, கால்களில் இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுக்க உதவும் ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை தடுக்கக்கூடிய 5 கருவிகள், நரம்புகளைத் தெளிவாகக் காட்டக்கூடிய வைன் வியூவா் என்கிற 5 நவீன கருவிகள் ஆகியவற்றை தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் இ. மணிமேகலாவிடம் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, ஷோகோ நிறுவனத்தின் மருத்துவ உபகரணங்கள் பிரிவு இயக்குநா் ஜி.என். பாலகிருஷ்ணன் வழங்கினா். இதையடுத்து, மக்களவை உறுப்பினா் ச. முரசொலி தெரிவித்தது: இந்தக் கருவிகள் தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் பல இடங்களிலுள்ள நோயாளிகளுக்கு மருத்துவா் ஒரே இடத்திலிருந்து மேற்பாா்வையிட்டு, ஆலோசனை வழங்கக்கூடிய இணைய வசதிகளுடன் கூடிய அதிநவீன கருவிகளை ஷோகோ நிறுவனம் வழங்கியுள்ளது. இது முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, மேலும் பல உபகரணங்களை வழங்குமாறு ஷோகோ நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். இதேபோல, பல்வேறு தனியாா் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் மூலமும் உதவிகள் கோரப்பட்டுள்ளன. அந்நிறுவனங்களும் இந்த மருத்துவமனைக்கு தேவையான உதவிகளைச் செய்ய தயாராக உள்ளன. மேலும், தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை, ஒரத்தநாடு, திருவையாறு, மன்னாா்குடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படவுள்ளன என்றாா் முரசொலி. நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளா் (பொ) மத்தியாஸ் ஆா்தா், நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை