தலைகீழாக விழுந்த ஹெலிகாப்டர்.. பெங்களூரை சேர்ந்த 5 பேர் + பைலட் பலி.. ஆலங்கட்டி மழையால் சோகம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
தலைகீழாக விழுந்த ஹெலிகாப்டர்.. பெங்களூரை சேர்ந்த 5 பேர் + பைலட் பலி.. ஆலங்கட்டி மழையால் சோகம்

டேராடூன்: உத்தரகாண்ட்டில் இன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பைலட் + பெங்களூரை சேர்ந்த 5 பேர் பலியாகி உள்ளனர். கேதார்நாத்தில் இருந்து வானில் பறந்த சிறிது நேரத்திலேயே இந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக விழுந்து விபத்தில் சிக்கியதும், இந்த விபத்துக்கு அங்கு நிலவிய மோசமான வானிலை தான் காரணமாக இருக்கலாம் என்ற திடுக்கிட வைக்கும் தகவலும் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் என்பது புகழ்பெற்ற ஆன்மிக தலமாகும். இங்கிருந்து பக்தர்கள் ஹெலிகாப்டரில் தலைநகர் டேராடூனுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் தான் பத்ரிநாத் தாம் பகுதியில் இருந்து தலைநகர் டேராடூனில் உள்ள சாகஸ்திரதாரா பகுதிக்கு 'டிரான்ஸ் பாரத் அவியேஷன்' என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பறந்து சென்று கொண்டிருந்தது. விமானத்தில் ஒரு பைலட் மற்றும் 5 பயணிகள் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் உத்தரகாண்ட்டின் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் என்ற பகுதியில் சாய் கிராமத்தின் மேல்புறம் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது. வானில் இருந்து வேகமாக தலைகீழாக ஹெலிகாப்டர் தரையில் வந்து விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. இதுபற்றி அறிந்தவுடன் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர்தினர் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர். விபத்து நிகழ்ந்த ஒரு மணிநேரத்துக்கு பிறகு அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். மோசமான வானிலை நிலவியதோடு, ஆலங்கட்டி மழை பெய்ததால் அவர்களால் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல முடியவில்லை. சவால்களை கடந்து அவர்கள் ஹெலிகாப்டர் விழுந்த இடத்தை கண்டுபிடித்தனர். சாய் கிராமத்தின் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நொறுங்கி தீப்பிடித்தது தெரியவந்தது. இதில் பைலட் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த 5 பயணிகளும் பலியாகினர். பயணிகள் அனைவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர்கள் அருண் சலுங்கே, எச்எஸ் நாகராஜா, பிரதாப் பிசிஹள்ளி, சுதீர், சங்கர் கவுடா என்பது தெரியவந்தது. இதில் அருண் சலுங்கே என்பவர் பெங்களூர் குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர். உயிரிழந்த பைலட்டின் பெயர் ஹிமான்சு சபர்வால் என்பதும் தெரியவந்தது. தற்போது வரை ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் மோசமான வானிலை தான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ஹெலிகாப்டர் இன்று விபத்தில் சிக்கிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகமூட்டமும், சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. இதனால் காலநிலை மாற்றத்தால் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் தான் ஹெலிகாப்டர் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும். தற்போது இந்த பகுதிகளிலும் பறக்கும் ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் வானில் பறக்கும் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழ்நோக்கி வரும் வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை