தலைமை தகவல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
தலைமை தகவல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

எஸ்.நடராஜன், டி.கே.ஷபீர், பி.மகாலிங்கம் சென்னை: மாநில தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஷகீல் அக்தர் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. அதேபோல் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக்காலமும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் மாநில தகவல் ஆணையத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 4 புதிய தகவல் ஆணையர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மனிதவளத் துறை செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட அறிவிக்கை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர மாநில தகவல் ஆணையர்களாக எஸ்.மகாலட்சுமி, டி.கே.ஷபீர், சி.பி.மீனா, பத்திரிகையாளர் பி.மகாலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த நியமனங்களை ஆளுநர் ஆர்வி.அர்லேகர் மேற்கொண்டுள்ளார். இவர்கள் இந்த பதவியில் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும் வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை இருப்பார்கள். இவர்களுக்கான ஊதியம், படிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். தகவல் ஆணையராக முதன்முதலாக பத்திரிகையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை