தலைநகருக்குள் தில்லி அல்லாத, பிஎஸ்-6 க்கு முந்தைய வாகனங்கள் நுழைவதற்கான தடையை நீக்க மறுப்பு: உயா்நீதிமன்றம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தலைநகருக்குள் தில்லி அல்லாத, பிஎஸ்-6 க்கு முந்தைய வாகனங்கள் நுழைவதற்கான தடையை நீக்க மறுப்பு: உயா்நீதிமன்றம்

பிஎஸ்-6 மாசு உமிழ்வுத் தரநிலைகளைப் பூா்த்தி செய்யாத, தில்லியில் பதிவு செய்யப்படாத வாகனங்கள் தலைநகருக்குள் நுழைவதற்கு நவம்பா் 1 முதல் ஜனவரி 31 வரை தடை விதித்த நகர நிா்வாகத்தின் முடிவுக்கு, தில்லி உயா் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. தில்லி காற்று மாசு - கோப்புப் படம் பிஎஸ்-6 மாசு உமிழ்வுத் தரநிலைகளைப் பூா்த்தி செய்யாத, தில்லியில் பதிவு செய்யப்படாத வாகனங்கள் தலைநகருக்குள் நுழைவதற்கு நவம்பா் 1 முதல் ஜனவரி 31 வரை தடை விதித்த நகர நிா்வாகத்தின் முடிவுக்கு, தில்லி உயா் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்தக் கட்டத்தில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க மறுத்த, பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரே மற்றும் நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, ஃபரிதாபாத்தைச் சோ்ந்த ஒரு வழக்குரைஞா் தாக்கல் செய்த மனு மீது நோட்டீஸ் அனுப்பி, அது தொடா்பான மற்றொரு வழக்கோடு நவம்பா் 27 அன்று விசாரணைக்குப் பட்டியலிட்டது. அனுராக் சக்சேனாவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட குா்முக் தாஸ் கோலி, தில்லியில் பதிவு செய்யப்படாத, பிஎஸ்-6-க்கு முந்தைய வாகனங்கள் மூன்று மாதங்களுக்குத் தலைநகருக்குள் நுழைவதற்குத் தடை விதித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்ட ஜூன் 23 அறிவிப்பைக் கடுமையாக எதிா்த்தாா். ‘தில்லிக்கு ஒரு விரிவான திட்டம் தேவை, ஒரே மாதிரியான ஒரு காரை மற்றொரு காரிலிருந்து பிரிக்கும் துண்டு துண்டான அல்லது அவசரமான நடவடிக்கை அல்ல,‘ என்று மனுதாரரின் வழக்குரைஞா் வலியுறுத்தினாா். முழுமையான தடை அமலில் உள்ள காலத்தில், பிஎஸ்-6 தரத்திற்கு முந்தைய தில்லி பதிவு பெற்ற வாகனங்கள் தலைநகரில் இயக்க அனுமதிக்கப்படுவது ஒரு ‘பாகுபாடான அணுகுமுறைக்கு‘ சமம் என்றும், ஒருங்கிணைந்த தேசிய தலைநகா் பிராந்தியத்தில் வசிக்கும் வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகள் உள்ளிட்ட குடிமக்களின் நடமாட்டத்தை இது கட்டுப்படுத்துவதால் இந்த நடவடிக்கை நீடிக்க முடியாதது என்றும் அந்த மனுவில் கூறப்பட்சுள்ளது. இந்தக் கொள்கை விகிதாசாரமற்றது, ஏனெனில் இந்தத் தடை எந்தவொரு குறிப்பிட்ட நாளிலும் உள்ள காற்றின் தரக் குறியீட்டு (அணஐ) அளவீடுகளுக்கு உட்பட்டது அல்ல, மேலும் ஆண்டு முழுவதும் அமலாக்கம் மற்றும் இரட்டை வாகன நிறுத்தக் கட்டணங்கள் போன்ற குறைந்த கட்டுப்பாடுகளைக் கொண்ட நடவடிக்கைகளுக்கு அறிவிப்பிலேயே வழிவகை செய்யப்பட்டிருந்தபோதிலும் இது விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ‘உத்தரவின்படி, 01.11.2026 முதல் 31.01.2027 வரை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும், அன்றைய காற்றின் தரக் குறியீட்டைப் பொருட்படுத்தாமல், மனுதாரா் தனது முறையாகப் பதிவுசெய்யப்பட்ட ஹரியாணா வாகனத்தை தில்லிக்குள் ஓட்டிச் செல்லத் தடை விதிக்கப்படும். அதே சமயம், தில்லியில் பதிவுசெய்யப்பட்ட, பிஎஸ்-6 வகை வாகனம் இதே கட்டுப்பாட்டின் வரம்பிற்குள் வராது,‘ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவு எந்தவொரு அறிவியல் மதிப்பீட்டின் அடிப்படையிலும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் வாதிடப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை