சிவகங்கை அருகே 78 வயது மூதாட்டி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டது குறித்து... சிவகங்கை அருகே 78 வயது மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொலை - கோப்புப்படம் சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் தலையில் கல்லைப் போட்டு 78 வயது மூதாட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், பாகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்த கட்டடத்தில் படுத்திருந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி பொன்னி (78) தலையில் கல்லைப் போட்டதால் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். பாகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்ததில் மூதாட்டிருவா் தலையில் ரத்த காயங்களுடன் இறந்த கிடப்பதாக மதகுபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மதகுபட்டி போலீசார், பொன்னியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பொன்னிக்கு 3 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் அண்மையில் இறந்துவிட்டதால் ஏற்பட்ட விரக்தியால் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டு பேருந்து நிறுத்தத்தில் உள்ள கட்டடத்தில் படுத்து உறங்குவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா, துணை கண்காணிப்பாளர் அமலஅட்வின் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
தலையில் கல்லைப் போட்டு மூதாட்டி கொலை: போலீசார் விசாரணை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗