தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, கொலை - கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறி பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து தி.மு.க மகளிர் அணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பதிவில், “தமிழ்நாடெங்கும் இன்று திமுக மகளிரணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தங்கள் வீடுகளின் மின்சார பில்-ஐயும் மளிகை பில்-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் ஷோ காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர். அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை” எனத் தெரிவித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன: மு.க. ஸ்டாலின்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗