தமிழ்நாட்டில் தீபாவளி மளிகை பொருள் தொகுப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு... கோப்புப்படம் - Gemini AI | Dinamani தமிழ்நாட்டிலுள்ள ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மளிகை பொருள் தொகுப்புகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரிசி விலை, மளிகை பொருள்களின் விலை உயர்வு மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. பண்டிகை காலத்தில் கட்டுக்கடங்காத விலை உயர்வால் தமிழக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் வழக்கமாக பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படும் பரிசுத் தொகுப்பை போன்று, இந்தாண்டு தீபாவளிக்கும் வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்பட்டு, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பலகாரம் செய்வதற்கு தேவையான சமையல் எண்ணெய், நெய், மைதா, கடலை மாவு, ரவை, உளுத்தம் பருப்பு, சர்க்கரை, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய ரூ. 500 முதல் 600 மதிப்பிலான மளிகை தொகுப்பை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கிட்டத்திட்ட 2.29 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு ரூ. 500 மதிப்பிலான மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கப்பட்டால் அரசுக்கு ரூ. 1,000 கோடிக்கு மேல் செலவாகும். இதுதொடர்பாக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புக்கான டெண்டரை தமிழக அரசு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 9 நாள்களே உள்ள நிலையில், மளிகைப் பொருள்கள் தொடர்பான அறிவிப்பு இன்றைக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது. புதுச்சேரியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ரூ. 700 மதிப்பிலான மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் தீபாவளி மளிகை பொருள் தொகுப்பு! இன்று அறிவிப்பு வெளியாகுமா?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗