தங்கப்புள்ள... ஜீவாவின் தகப்பன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தங்கப்புள்ள... ஜீவாவின் தகப்பன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள தகப்பன் படத்தின் முதல் பாடல் குறித்து... தகப்பன் படத்தின் போஸ்டர் - படம்: யூடியூப் / திங்க் மியூசிக் இந்தியா நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள தகப்பன் படத்தின் முதல் பாடலான தங்கப்புள்ள எனும் விடியோ பாடல் வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் ‘தகப்பன்’ என்ற படம் உருவாகி வருகிறது. மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ள இப்பாடலை முருகவேல் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழத்தையும், பிரிவின் வலியையும், தந்தையின் அளவற்ற அன்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாகத் தமிழ் சினிமாவில் அப்பா – மகன் அல்லது அப்பா – மகள் இருவரும் ஒன்றாக இருக்கும் தருணங்களையும், அவர்களுக்கிடையேயான பாசத்தையும் வெளிப்படுத்தும் பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆனால், மகனைப் பிரிந்து வாழும் தந்தை ஒருவர், தனது மகனின் வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் உணர்வுகளை மையமாகக் கொண்டு ‘தங்கப்புள்ள’ பாடல் உருவாகியுள்ளது. மகனுடன் நேரடியாகத் தனது அன்பைப் பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு தந்தையின் ஏக்கத்தையும், மகனின் மகிழ்ச்சியை மறைந்திருந்து ரசிக்கும் பாசத்தையும் இப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது. மென்மையான இசை, பா. விஜய்யின் உணர்வுப்பூர்வமான வரிகள், முருகவேலின் குரல் ஆகிய அனைத்தும் இணைந்து பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. தந்தையின் மனதில் புதைந்திருக்கும் அன்பையும், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளையும் காட்சிகளுடன் இணைத்து வெளிப்படுத்தும் இப்பாடல், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. மேலும், படம் முடிவடைவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் மற்றும் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடலும் படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை