தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் அருகே தர்காவிற்குள் புகுந்த சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பால் அப்பகுதியில் பரபரபப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வேட்டைத் தடுப்புக் காவலர் உதவியுடன் மலைப் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியில் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் பகுதியில் ஆற்றங்கரையோரம் பிரசித்தி பெற்ற காஜா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவிற்குள் நேற்றிரவு சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. ராட்சத மலைப்பாம்பு மீட்பு இதைப் பார்த்த அப்பகுதியினர் இதுகுறித்து வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ்க்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் அப்பகுதியினர் உதவியுடன் லாவகமாக அங்கு பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார். தொடர்ந்து அடர் வனப்பகுதியில் அந்த மலைப்பாம்பு விடுவிக்கப்பட்டது. கடையம் அருகே தர்காவிற்குள் மலைப்பாம்பு பதுங்கி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்காவுக்குள் அப்படி என்ன பதுங்கியிருந்தது?.. 12 அடி நீள மலைப்பாம்பால் தென்காசியில் பரபரப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: oneindia.com (original report) ↗