உரிமம் இல்லா 44 நாட்டுத் துப்பாக்கிகள் காவல்துறையில் ஒப்படைத்தது பற்றி.. காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள் - file photo தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத 44 நாட்டுத் துப்பாக்கிகளை, வனத்துறையினர் ஆட்சியர் முன்னிலையில் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தருமபுரி மாவட்டத்தில் வனவிலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையில், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளைத் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில், வனத்துறையினர் விழிப்புணர்வு கூட்டங்கள், துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக, தருமபுரி வனக் கோட்டத்திற்குட்பட்ட 8 வனச்சரகங்களிலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து 44 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதில் கடந்த ஓராண்டில் தருமபுரி-11, பென்னாகரம்-07, அரூர்-06, கோட்டப்பட்டி-02, மொரப்பூர்-06, தீர்த்தமலை-12 என மொத்தம் 44 நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காட்சிப்படுத்தி, மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், முன்னிலையில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரத்திடம் முறையாக ஒப்படைத்தனர். தொடர்ந்து ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும், தருமபுரி ஆயுதப்படை மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தருமபுரியில் 44 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗