தடைகளைத் தாண்டி சாதனை படைக்கப்போகும் ராசிகள் இவைதான்! வார ராசி பலன்கள் (அக். 30 - நவ. 5)

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தடைகளைத் தாண்டி சாதனை படைக்கப்போகும் ராசிகள் இவைதான்! வார ராசி பலன்கள் (அக். 30 - நவ. 5)

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள் தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (அக். 30 - நவ. 5) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள். உங்கள் காரியங்களில் முன்னேற்றம் உண்டாகத் தொடங்கும். உங்கள் புகழ் கூடும். உங்களின் பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் சுமாராகவே இருக்கும். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகள் அனைத்தும் சுமுகமாகவே முடிவடையும். அரசியல்வாதிகள் கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படும். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கூடும். சந்திராஷ்டமம் - இல்லை. புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறிது மருத்துவச் செலவு செய்ய நேரிடும். உத்தியோகஸ்தர்கள் சில தவிர்க்க முடியாத வேலைகளை செய்வார்கள். வியாபாரிகள் சம்பந்தமில்லாத பொருள் விற்பனையில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்குத் தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினருக்கு வருமானம் குறைவாகக் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவர்கள் நண்பரிடம் விட்டுக் கொடுத்துப் பழகுவீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் புத்திர பாக்கியம் ஏற்படும். வருமானம் படிப்படியாக உயரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகள் வண்டி வாகனங்களில் பராமரிப்புச் செலவு செய்வீர்கள். விவசாயிகள் இடைத்தரகர்களிடம் கவனமாக இருப்பீர்கள். அரசியல்வாதிகள் போராட்டங்களில் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். பெண்கள் உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. அனைத்துச் செயல்களையும் திட்டமிட்டுச் செய்து முடித்துவிடுவீர்கள். மனதில் இருந்த கவலை, பயம் நீங்கிவிடும். தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் வியாபார சங்கங்களில் பதவி ஏற்பீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பயணங்களைத் தவிர்த்துவிடுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் நட்புப் பாராட்டுவீர்கள். பெண்கள் புதிய ஆடை அணிமணிகளை வாங்குவீர்கள். மாணவர்கள் ஆசிரியரிடம் விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. மற்றவர்களின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். நண்பர்களின் ஆலோசனை மேன்மையை ஏற்படுத்தும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வருமானம் உயரக் காண்பீர்கள். வியாபாரிகள் கடையை செலவு செய்து அலங்கரிப்பீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு கலை நுட்பங்களைக் கற்றுக்கொடுப்பீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் மனதை ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளை வசூலிப்பீர்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் துறையில் உயர்ந்தவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். பெண்கள் கணவரிடம் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் உதவிகளைப் பெறுவீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். புனித தலங்களுக்குச் சென்று வருவீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை சுறுசுறுப்பாக குறித்த நேரத்துக்குள் செய்து முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடுவீர்கள். அரசியல்வாதிகள் கடினமாக கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பாரா பணவரவைக் காண்பீர்கள். பெண்கள் பெற்றோரின் பாராட்டைப் பெறுவீர்கள். மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. மனதில் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு உழைப்பீர்கள். உறவினர்களிடம் மனம் விட்டுப்பேசி பிணக்குகளைச் சரி செய்து கொள்வீர்கள். எதிர்பார்த்த அங்கீகாரங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழல்களில் மாற்றங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவீர்கள். அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். கலைத்துறையினர் புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். சந்திராஷ்டமம் - அக்டோபர் 30, 31. வீட்டிலும் வெளியிலும் உங்களின் பெயரும் புகழும் கூடும். உடல் ஆரோக்கியம் பலப்படும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவீர்கள். பெண்கள் உடன்பிறந்தோருக்கு உதவிகளைச் செய்வீர்கள். மாணவர்கள் சக மாணவர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். சந்திராஷ்டமம் - நவம்பர் 1, 2. தொழிலில் இருந்த பிரச்னைகள் குறையும். மனதில் தெளிவுடன் காரியமாற்றுவீர்கள். எதிர்பாராத பயணங்களைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை நம்பி எதையும் செய்யவேண்டாம். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளின் எண்ணங்கள் பூர்த்தியாகும். கலைத்துறையினரின் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். பெண்கள் குழந்தைகளைப் பாராட்டி நல்வழியில் திருப்புவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பான முன்னேற்றங்களைக் காண்பீர்கள். சந்திராஷ்டமம் - நவம்பர் - 3, 4. சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். பிரார்த்தனைகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பேராதரவு கிடைக்கும். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகளுக்கு விவசாயிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் கட்சியில் பொறுப்பான பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் துறையில் நிலவிய போட்டி பொறாமைகள் குறையக் காண்பீர்கள். பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு தங்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். சந்திராஷ்டமம் - நவம்பர் 5. மனதில் தெளிவுகள் பிறக்கும். உடன் பிறந்தவர்களும் தேவைக்கேற்ற உதவிகளைச் செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழல்களுக்கு ஏற்ப மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் மேன்மை அடைவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளின் செயல்பாடுகளில் சுறுசுறுப்புகூடத் தொடங்கும். கலைத்துறையினர் ரசிகர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். பெண்கள் புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் சக மாணவர்கள், ஆசிரியருடன் சுற்றுலா சென்றுவருவீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை