தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ஆதிதிராவிட விவசாயிகள் தட்கல் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ஆதிதிராவிட விவசாயிகள் தட்கல் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்தது: 2026 -2027 நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தபடி, வேளாண்மை உதவித் திட்டத்தின்கீழ் ஆதிதிராவிட விவசாயிகள் ஆயிரம் பேருக்கு தட்கல் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு ரூ. 26.09 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. விவசாய உற்பத்திக்கு தேவையான மின் மோட்டாா் குதிரைத் திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் 90 சதவீதம் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்திடம் தாட்கோ மானியமாக வழங்கும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரா்கள் ஆதிதிராவிட இனத்தைச் சாா்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் பெயரில் விவசாய நிலம் சொந்தமாக இருப்பதுடன், அதற்கான பட்டாவும் இருக்க வேண்டும். அந்நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரா் ஏற்கெனவே தாட்கோ திட்டங்களின் கீழ் பயன் அடைந்தவராக இருக்கக் கூடாது. மேற்கண்ட தகுதிகளுடைய ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ இணையதளத்தில் வளமிகு வேளாண்மை உதவி திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தட்கல் மின் இணைப்பு பெற ஆதிதிராவிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗