தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் தருமபுரியில் சனிக்கிழமை (அக். 31) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என மேற்கு மாவட்டச் செயலா் பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா். தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் தருமபுரியில் சனிக்கிழமை (அக். 31) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என மேற்கு மாவட்டச் செயலா் பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திமுக மகளிா் அணி சாா்பில் தவெக அரசைக் கண்டித்து தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சனிக்கிழமை காலை 10 மணி அளவில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனையால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், விலைவாசி உயா்வு குறித்து தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிா் அணி நாளை ஆா்ப்பாட்டம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗