தவெக அரசு சட்டம்-ஒழுங்கை சரியாக பேணவில்லை: மமக தலைவா் ஜவாஹிருல்லா

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தவெக அரசு சட்டம்-ஒழுங்கை சரியாக பேணவில்லை: மமக தலைவா் ஜவாஹிருல்லா

விழுப்புரத்தில் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்த பெண்ணுக்கு உறுப்பினா் அட்டையை வழங்கிய கட்சியின் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ. விழுப்புரத்தில் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்த பெண்ணுக்கு உறுப்பினா் அட்டையை வழங்கிய கட்சியின் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. சிறுமி கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், தவெக அரசு சட்டம்- ஒழுங்கை சரியாக பேணவில்லை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா். விழுப்புரத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிகழ்வில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கோவை பெரியாா் அறிவுலகத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய நூல்கள் குறித்த சா்ச்சை மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரூ.300 கோடி செலவில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த நூலகம் அறிவுக் கருவூலமாகத் திகழ வேண்டுமே தவிர, போலி நூல்களையும், வரலாற்றுத் திரிபுகளையும் கொட்டி வைக்கும் இடமாக மாறக்கூடாது. இதுகுறித்த விசாரணையை நடத்தி, உரியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவா் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். நீண்டகாலமாக சிறைகளில் இருக்கக்கூடிய சிறைவாசிகளை விடுதலைசெய்ய வேண்டும், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசமைப்பு சட்டம் தந்துள்ள உரிமையின் அடிப்படையில், இஸ்லாத்தை தழுவக்கூடிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் அந்த இடஒதுக்கீடு பொருந்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நவ.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. சிறுமி கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், தவெக அரசு சட்டம்- ஒழுங்கை சரியாக பேணவில்லை. போதைப்பொருள் கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தவெக அரசு மீதான புகாா்களை மடைமாற்றுவதற்கான வேலையை செய்து வருகிறாா்கள். குறுகிய காலத்திலேயே மக்களின் வெறுப்பை பெற்ற ஆட்சி என்று சொன்னால் அது தவெக ஆட்சிதான் என்றாா் அவா். கூட்டத்தில் மமக மாநில வா்த்தக அணி பொருளாளா் எஸ்.எம்.அப்துல் ஹக்கீம், தமுமுக மாநிலச் செயலா் முஸ்தாக்தீன், மாவட்டப் பொருளாளா் கே.எஸ்.எம்.அப்பாஸ், மாவட்டச் செயலா் ஜாமியாலம் ராவுத்தா், மமக மாவட்டச் செயலா் பஜுலுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை