தீபாவளியை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை அறிவிப்பு. மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்காக 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நவ. 5, 6 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகளை இயக்கவுள்ளது. நவம்பர் 5, 2026 (வியாழக்கிழமை இன்று): பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மாலை நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான (Peak-hour) மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான மாலை 3 மணிக்குப் பதிலாக, இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்படும் நவம்பர் 6, 2026 (வெள்ளிக்கிழமை நாளை): பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மாலை நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான (Peak-hour) மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான மாலை 5.00 மணிக்கு பதிலாக, மாலை 4.00 மணிக்கே தொடங்கி, இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்படும். முனைய நிலையங்களிலிருந்து (Terminal Stations) புறப்படும் கடைசி மெட்ரோ ரயில் நேரம் (06.11.2026): பச்சை மற்றும் நீல வழித்தடத்தில்: வழக்கமான இரவு 11:00 மணிக்கு பதிலாக, நள்ளிரவு 12:00 மணி வரை இயங்கும். மஞ்சள் வழித்தடத்தில்: வழக்கமான இரவு 9:00 மணிக்கு பதிலாக, இரவு 11:00 மணி வரை இயங்கும். மேற்கண்ட மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் பயணிகள் இதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!