தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கியது பற்றி.. தீபாவளி மளிகைத் தொகுப்பு - video grab செங்குன்றத்தில் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவைப் பிரிவு திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனையை அமைச்சர் வ.காந்திராஜ் தொடங்கி வைத்தார்! திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பிரதான சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு சிறப்பு அங்காடியின் சுயசேவைப் பிரிவு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, திறப்பு விழா பலகையைத் திறந்து வைத்து புதிய பிரிவை மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார். மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருள்களை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தையும் அமைச்சர் வ.காந்திராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா ஐ.ஏ.எஸ்., கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்., பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் ரவி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.விஜய் பிரபு மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மக்களுக்கு நேரடியாக மளிகைப் பொருள்கள் வழங்கிய அமைச்சர்! திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சிறப்பு மளிகைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருள்களை அமைச்சர் காந்திராஜ் மக்களுக்கு நேரடியாக வழங்கினார். இதையடுத்து, அங்கு வந்திருந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வாங்கிச் சென்றனர். தீபாவளி பண்டிகைக் காலத்தில் குடும்பங்களின் அத்தியாவசியச் செலவுகளைக் குறைக்கும் வகையில், ஒரே தொகுப்பில் சமையலுக்குத் தேவையான முக்கிய மளிகைப் பொருள்களை குறைந்த விலையில் வழங்கும் இந்தத் திட்டம் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது. ரூ.200-க்கு கிடைக்கும் 10 வகையான மளிகைப் பொருள்கள் என்னென்ன? ரூ.200 மதிப்பிலான சிறப்பு மளிகைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்களின் விவரம்: 1. கடலைப் பருப்பு – 250 கிராம் 2. பாசிப்பருப்பு – 250 கிராம் 3. மிளகாய் – 100 கிராம் 4. தனியா – 150 கிராம் 5. பூண்டு – 150 கிராம் 6. புளி – 250 கிராம் 7. கடுகு – 100 கிராம் 8. உடைத்த உளுத்தம் பருப்பு – 100 கிராம் 9. சீரகம் – 50 கிராம் 10. சோம்பு – 50 கிராம் இவ்வாறு மொத்தம் 10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரூ.200-க்கு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்! நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருள்களை குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருள்ளின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், கூட்டுறவுத்துறை சிறப்பு அங்காடிகள் வாயிலாக தரமான பொருள்களை நியாயமான விலையில் பெற்றுப் பயனடையவும் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. செங்குன்றம் பகுதியில் கூட்டுறவு சிறப்பு அங்காடியின் சுயசேவைப் பிரிவு திறக்கப்பட்டதுடன், தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனையும் தொடங்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. யாருக்குக் கிடைக்கும்? குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவரும், தங்கள் அருகில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையத்தில் இந்தத் தொகுப்பைப் பெற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை