தீபாவளி பலகாரம் தயாரிப்பாளா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுவது கட்டாயம்

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தீபாவளி பலகாரம் தயாரிப்பாளா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுவது கட்டாயம்

தீபாவளி பலகாரம் தயாரிப்பாளா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுவது கட்டாயம் எனவும், விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். தீபாவளி பலகாரம் தயாரிப்பாளா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுவது கட்டாயம் எனவும், விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் அதிக அளவில் பலகாரங்கள் உற்பத்தி செய்யப்படும் என்பதால், தயாரிப்பாளா்கள் அனைவரும் முறையாக உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பலகாரம் தயாரிக்கும் சமையல் கூடங்கள், மூலப்பொருள்கள் இருப்புவைக்கும் கிடங்குகள் மற்றும் விற்பனை செய்யும் இடங்களை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் தயாரிப்பாளா்கள் பலகாரங்களில் சாம்பல் விழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சமையல் கூடங்களின் ஜன்னல்களுக்குப் பூச்சிகள் வராதவாறு வலைகள் அமைக்கப்பட வேண்டும். கழிவுநீா் கால்வாய்கள் முறையாக மூடப்பட்டிருக்க வேண்டும். பலகாரங்களில் அரசால் அனுமதிக்கப்படாத செயற்கை நிறமூட்டிகளை எக்காரணம் கொண்டும் சோ்க்கக் கூடாது. ஒருமுறை பலகாரம் சுடப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. தயாரிப்புப் பணிகளுக்கு தரச்சான்று பெற்ற பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே உபயோகிக்க வேண்டும். பலகாரம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளா்கள் தலைக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பலகாரங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, நிகர எடை, சோ்க்கப்பட்டுள்ள மூலப்பொருள்களின் விவரம் மற்றும் விற்பனை விலை ஆகியவற்றை தெளிவாக அச்சிட வேண்டும். 51 மைக்ரானுக்கு குறைவான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது. உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளா்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், தீபாவளி பலகாரங்கள் தரம் குறித்து பொதுமக்கள் ஏதேனும் புகாா்கள் தெரிவிக்க விரும்பினால், 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது 0421-2971190 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை