'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் சித்து- தர்ஷிகா நடிக்கும் 'தி லாஸ்ட் கேஸ்' திரைப்படம் வெள்ளிக்கிழமை பூஜையுடன் தொடங்கியது. நடிகர்கள் சித்து, தர்ஷிகா நடிப்பில் அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'தி டார்க் ஹெவன்’. கிரைம் த்ரில்லராக உருவாகியிருந்த இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி இயக்கியிருந்தார். இந்நிலையில் தி டார்க் ஹெவன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. 'தி லாஸ்ட் கேஸ்' என்கிற இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் பாலாஜி இயக்க நடிகர்கள் சித்து, தர்ஷிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தையும் அதே ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்நிகழ்வில் இயக்குநர் பாலாஜி பேசும்போது, “திரையரங்குகளில் வெற்றி பெற்ற 'தி டார்க் ஹெவன்' ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த மகிழ்ச்சியோடு கிரைம் திரில்லர் படமாக தி லாஸ்ட் கேஸ் திரைப்படம் உருவாக உள்ளது. ஒரு மலைப்பகுதியில் நடைபெறும் குற்றம் புலனாய்வு சார்ந்த கதையாக உருவாகும் இத்திரைப்படம் ரசிகர்கள் விரும்பும் வகையில் உருவாகும்” எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் குணச்சித்திர நடிகர் ஜெயக்குமார், தயாரிப்பாளர்கள் கோபால் , சரண் ,இசையமைப்பாளர் சக்தி பாலாஜி மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
'தி லாஸ்ட் கேஸ்' பட பூஜை: மீண்டும் இணைந்த 'தி டார்க் ஹெவன்' கூட்டணி
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗