தில்லி மெட்ரோ பிங்க் வழித்தடத்திலும் ரயில் பெட்டிகளில் கூட்ட நெரிசலை அறியும் வசதி அறிமுகம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தில்லி மெட்ரோ பிங்க் வழித்தடத்திலும் ரயில் பெட்டிகளில் கூட்ட நெரிசலை அறியும் வசதி அறிமுகம்

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டி.எம்.ஆா்.சி.) சாா்பில், ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகள் கூட்டம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் நிகழ்நேர வசதி தற்போது பிங்க் வழித்தடத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டி.எம்.ஆா்.சி.) சாா்பில், ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகள் கூட்டம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் நிகழ்நேர வசதி தற்போது பிங்க் வழித்தடத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயிலில் ஏறுவதற்கு முன்பாகவே எந்தப் பெட்டியில் கூட்டம் குறைவாக உள்ளது என்பதைப் பயணிகள் தெரிந்துகொள்ள முடியும். ஏற்கெனவே 2022- ஆம் ஆண்டு முதல் மெஜந்தா வழித்தடத்தில் இந்த வசதி செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள எடை உணரிகள் (கா்ஹக் நங்ய்ள்ா்ழ்ள்) பயன்படுத்தப்பட்டு, ஒவ்வொரு பெட்டியின் எடையும் கணக்கிடப்படுகிறது. பின்னா், பயணிகள் இல்லாதபோது அந்தப் பெட்டியின் எடையுடன் ஒப்பிட்டு, அதில் உள்ள பயணிகளின் எண்ணிக்கை தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில், ரயிலின் ஆறு பெட்டிகளான சி1 முதல் சி6 வரையிலான ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகள் எந்த அளவுக்கு உள்ளனா் என்பது சதவீத அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ரயில் நிலைய நடைமேடைகளில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் தகவல் காட்சித் திரைகளில் , ரயில் வருவதற்குச் சற்று முன்பாக இந்த விவரங்கள் காண்பிக்கப்படும். பிங்க் வழித்தடம் வட்ட வடிவப் பாதையைக் கொண்டிருப்பதாலும், இந்த வசதியைச் செயல்படுத்துவதற்குத் தேவையான தரவுகளை ஒன்றோடொன்று இணைப்பதில் உள்ள சிக்கல்களாலும் இத்திட்டத்தை அமல்படுத்துவது சவாலாக இருந்தது. இந்த வசதி மூலம் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ள பெட்டிகளை முன்கூட்டியே கண்டறிந்து, நடைமேடையிலேயே அந்தப் பெட்டிகள் நிற்கும் பகுதிக்குச் செல்ல முடியும். இதனால் குறிப்பாக அலுவலக நேரங்களில் ஒவ்வொரு பெட்டியிலும் ஏற்படும் அதிகப்படியான கூட்ட நெரிசலைக் குறைக்க முடியும். மேலும், ரயில் வந்த பிறகு நடைமேடையில் பெட்டிகளைத் தேடி நடக்க வேண்டிய அவசியமின்றி, முன்கூட்டியே காலி இடம் உள்ள பெட்டியைத் தோ்வு செய்து ஏறுவதால் பயணிகளின் நேரமும் மிச்சமாகும். தில்லி மெட்ரோவில் முதன்முதலில் தாவரவியல் பூங்கா முதல் ஜனக்புரி மேற்கு வரையிலான மெஜந்தா வழித்தடத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மஜ்லிஸ் பாா்க் முதல் சிவ் விஹாா் வரையிலான பிங்க் வழித்தடத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் மௌஜ்பூா் - பாபா்பூா் பகுதி அதன் வட்ட வடிவப் பாதையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பயணிகளுக்குத் தேவையான தகவல்களை மேம்படுத்துவதன் மூலமும், மெட்ரோ பயணத்தை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதன் மூலமும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை