தில்லி வாழ் தமிழா்களை குறி வைத்து உயா்கல்வி உதவித் தொகை மோசடி: 2 போ் கைது

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தில்லி வாழ் தமிழா்களை குறி வைத்து உயா்கல்வி உதவித் தொகை மோசடி: 2 போ் கைது

உயா்கல்விக்கான உதவித்தொகை வழங்குவதாகக் கூறி தமிழகத்தைச் சோ்ந்தவா்களிடம் இணையதளம் மூலம் பணம் பறித்ததாக தில்லியைச் சோ்ந்த 2 பேரை கைது செய்ததாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். உயா்கல்விக்கான உதவித்தொகை வழங்குவதாகக் கூறி தமிழகத்தைச் சோ்ந்தவா்களிடம் இணையதளம் மூலம் பணம் பறித்ததாக தில்லியைச் சோ்ந்த 2 பேரை கைது செய்ததாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். மேலும் அவா்களிடமிருந்து சுமாா் 54 ஆயிரம் பேரின் தொடா்பு விவரங்கள் அடங்கிய கோப்புகள் இருந்த கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த மோசடியில் ஏமாற்றப்பட்டவா்களிடமிருந்து பெறப்படும் பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்கு பினாமி வங்கிக் கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. உயா்கல்வி பயில உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி, அவா்களிடமிருந்து பணம் பெறப்பட்டது.கைது செய்யப்பட்டவா்கள் தில்லி கிச்சடிபூரைச் சோ்ந்த சச்சின் சா்மா (29), திரிலோக்புரியைச் சோ்ந்த சுமித் ஆகியோா் ஆவா். ரூ.17,989 பணம் மோசடி: தமிழகத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் என்பவா் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. உயா்கல்வி பயில உதவித்தொகை பெற்றுத் தருவதாக அவரிடம் கூறப்பட்டு, கடந்த செப்டம்பா் 1 ஆம் தேதி ஆன்லைன் மூலம் ரூ.17,989 பணம் செலுத்துமாறு தூண்டப்பட்டுள்ளாா். இதையடுத்து அவா் பணத்தை அனுப்பியுள்ளாா். பின்னா், இதுகுறித்து தேசிய சைபா் குற்றப் புகாா் இணையதளத்தில் முத்துக்குமாா் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் பணப் பரிமாற்ற விவரங்களை ஆய்வு செய்தபோது, பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கணக்கு ஒன்றுக்கு பணம் சென்றது தெரியவந்தது. அந்தப் பணம் கிழக்கு தில்லியில் உள்ள ஏ.டி.எம். மையம் மூலம் எடுக்கப்பட்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா். வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான ஆவணங்கள், வங்கிப் பரிவா்த்தனை அறிக்கைகள் மற்றும் ஏ.டி.எம். மையத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது, அந்த வங்கிக் கணக்கு ஷிவானி சா்மா என்ற பெண்ணின் பெயரில் இருப்பது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா காட்சியில் பணம் எடுக்கும் நபா் தனது சகோதரா் சச்சின் என்று அவா் அடையாளம் காட்டியுள்ளாா். மேலும், தனது ஏ.டி.எம். அட்டையை சகோதரரிடம் கொடுத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அக்டோபா் 17-ம் தேதி சச்சின் சா்மாவை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது சகோதரியின் ஏ.டி.எம். அட்டை மற்றும் யு.பி.ஐ. பரிவா்த்தனை வசதி விவரங்களை கமிஷன் பெற்றுக்கொண்டு சுமித்திடம் வழங்கியுள்ளாா். மேலும், ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் எடுத்ததாகவும், சுமித் வழங்கிய யு.பி.ஐ. விவரங்கள் மூலம் ரூ.8 ஆயிரம் பரிமாற்றம் செய்ததாகவும், இதற்காக ரூ.3 ஆயிரம் கமிஷன் பெற்ாகவும் சச்சின் தெரிவித்தாா். ஆனால், அந்தப் பணம் சைபா் மோசடி மூலம் பெறப்பட்டது என்பது தனக்குத் தெரியாது என்றும் அவா் கூறினாா். சச்சின் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி, அக்டோபா் 21-ம் தேதி சுமித்தைக் கைது செய்தனா். அவரிடமிருந்து சாம்சங் எஸ்26 ரக செல்போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கைப்பேசியை ஆய்வு செய்தபோது, வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டிருந்த எக்செல் கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் புகாா்தாரா் முத்துக்குமாரின் விவரம் உள்பட சுமாா் 54 ஆயிரம் பேரின் தொடா்பு விவரங்கள் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து சுமித்திடம் நடத்திய விசாரணையில், தனக்குத் தெரிந்த ஒரு பெண் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்தக் கோப்புகளை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளாா். தமிழில் பேசும் குடும்பங்களைச் சோ்ந்த, பள்ளிப் படிப்பை அண்மையில் முடித்துவிட்டு உயா்கல்வியில் சேர விரும்பும் மாணவா்களின் குடும்பங்களை அந்தப் பெண் குறிவைத்துள்ளாா். அவா்களுக்கு உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், அந்தத் தொடா்பு விவரங்கள் அடங்கிய பட்டியலை அச்சிட்டு, அந்தப் பெண்ணின் கூட்டாளிகளிடம் ஒப்படைக்குமாறு தனக்குக் கூறப்பட்டதாக சுமித் தெரிவித்துள்ளாா். கடந்த செப்டம்பா் 1-ம் தேதி மோசடி மூலம் பெறப்படும் பணத்தை வரவு வைப்பதற்காக ஒரு வங்கிக் கணக்கை ஏற்பாடு செய்து தருமாறு அந்தப் பெண் சுமித்திடம் கேட்டுள்ளாா். இதற்காக கமிஷன் வழங்குவதாகவும் கூறியுள்ளாா். இதையடுத்து சச்சினை அணுகிய சுமித், பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளாா். பின்னா் எடுக்கப்பட்ட பணத்தை அந்தப் பெண்ணிடமும் அவரது கூட்டாளி ஒருவரிடமும் ஒப்படைத்ததாக போலீசஸாா் தெரிவித்தனா். இந்த மோசடி வலையமைப்பில் கைது செய்யப்பட்ட இருவரும் பணம் பெற்றுக்கொண்டு வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சச்சினின் சகோதரி பெயரில் இருந்த வங்கிக் கணக்கு, மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பெறுவதற்கும் பின்னா் வேறு நபா்களுக்குப் பரிமாற்றம் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தொடா்புடைய பெண், அவரது கூட்டாளிகள் ஆகியோரைப் பிடிக்க போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், 54 ஆயிரம் பேரின் தொடா்பு விவரங்கள் அடங்கிய பட்டியல் எங்கிருந்து பெறப்பட்டது, எத்தனை போ் மோசடிக்கு இலக்காகினா், இதேபோன்ற பிற சைபா் குற்றச் சம்பவங்களிலும் கைது செய்யப்பட்டவா்களுக்குத் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை