தலைநகர் தில்லியில் லாலுபிரசாத் யாதவ் - சோனியா காந்தி சந்தித்திருப்பது பற்றி... தில்லியில் லாலு-சோனியா சந்திப்பு தில்லியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) நிறுவனா் லாலு பிரசாத் யாதவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார். லாலுவின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான மிசா பாரதியின் இல்லத்தில் திங்கள்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, ஆர்ஜேடி தலைவரும் லாலுவின் இளையை மகனுமான தேஜஸ்வி யாதவும் உடனிருந்தார். இதுகுறித்து லாலு தனது எக்ஸ் தளத்தில், "சோனியா காந்தி எனது இல்லத்திற்கு வருகை தந்து, உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது, பழைய நினைவுகள் மீண்டும் மலர்ந்தன" என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லாலுவின் மகன் தேஜஸ்வி, "லாலு தனது வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக தில்லி வந்திருந்தார். நேற்று நான் சோனியாவைச் சந்தித்தபோது, இது குறித்து அவரிடம் தெரிவித்தேன். லாலுவைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து இன்று அவரைச் சந்திக்க வந்துள்ளார்" என்று கூறினார். மேலும் அவர், "எங்கள் குடும்பங்களுக்கு இடையே மிகவும் நெருக்கமான பிணைப்பு உள்ளது. கடினமான காலங்களில் லாலுவும் சோனியாவும் ஒருவருக்கொருவர் உதவியிருக்கிறார்கள். இருவரும் சந்தித்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அதனால் இன்று அவரைச் சந்திக்க சோனியா வந்தார்," என்று தெரிவித்தார். வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக தில்லி ராம்லீலா திடலில் இந்தியா கூட்டணி பேரணி நடத்திய மறுநாளே இந்தச் சந்திப்பு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தில்லியில் லாலுவுடன் சோனியா காந்தி சந்திப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗