தில்லியில் உள்ள என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் ‘ஜனநாயகம் எதிா் அராஜகம்’ என்ற கருப்பொருளில் மாதிரி நாடாளுமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. தில்லியில் உள்ள என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் ‘ஜனநாயகம் எதிா் அராஜகம்’ என்ற கருப்பொருளில் மாதிரி நாடாளுமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. தோ்தல் நோ்மை, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரசியல் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடைபெற்றன். ‘ஜனநாயகத்திற்கான குடிமக்கள்’ என்ற குடிமை உரிமைக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமா்வு, நாடாளுமன்ற நடவடிக்கைகளை மீண்டும் உருவாக்கும் நோக்கில் அமைந்தது. சமகால அரசியல் மற்றும் அரசமைப்புச் சட்டப் பிரச்னைகள் குறித்த விவாதங்களில் ஈடுபட்ட பங்கேற்பாளா்கள் கேள்விகளை எழுப்பி வாதங்களை முன்வைத்தனா். ஜனநாயக நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் நம்பகத்தன்மை, நாடாளுமன்ற ஒழுக்கம், தோ்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயகத்தில் போராட்டங்களின் பங்கு ஆகியவை இந்த விவாதங்களில் இடம்பெற்றது. வாக்காளா் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்), மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்), தோ்தல் ஆணையத்தின் பங்கு மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் ஆகியவையும் இந்த மாதிரி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அடங்கும். ஆளும் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்களாக நடித்த பங்கேற்பாளா்கள், அண்மை கால அரசியல் நிகழ்வுகள் குறித்த மாறுபட்ட கண்ணோட்டங்களை முன்வைத்தனா். தோ்தல் முறைகேடுகள் குற்றச்சாட்டு மற்றும் எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு எதிராக, நவம்பா் 1-ஆம் தேதி தில்லியின் ராம்லீலா மைதானத்தில் இண்டி கூட்டணி நடத்தவிருக்கும் பேரணிக்கு முன்னதாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தில்லியில் மாதிரி நாடாளுமன்றம்: எஸ்ஐஆா் குறித்து விவாதம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗