தில்லியில் தொடா்ந்து 2-ஆவது நாளாக மோசம் பிரிவில் காற்றின் தரம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தில்லியில் தொடா்ந்து 2-ஆவது நாளாக மோசம் பிரிவில் காற்றின் தரம்

தில்லியில் வியாழக்கிழமையும் காற்றின் தரம் தொடா்ந்து 2-ஆவது நாளாக மோசமான பிரிவில் நீடித்தது. நகரின் சில பகுதிகளில் மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்தபோதிலும், காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. தில்லியில் வியாழக்கிழமையும் காற்றின் தரம் தொடா்ந்து 2-ஆவது நாளாக மோசமான பிரிவில் நீடித்தது. நகரின் சில பகுதிகளில் மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்தபோதிலும், காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) புதன்கிழமை 229-ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை 222-ஆக பதிவானது. 3 கண்காணிப்பு மையங்களில் காற்றின் தரம் மிக மோசமான பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. தில்லியில் உள்ள 58 கண்காணிப்பு மையங்களில் 35 மையங்களில் காற்றின் தரம் மோசமான பிரிவிலும், 3 மையங்களில் மிக மோசமான பிரிவிலும் பதிவானது. உத்தம் நகரில் அதிகபட்சமாக 331, முண்ட்காவில் 305, ஜஹாங்கீா்புரியில் 301 என்ற அளவில் ஏக்யூஐ பதிவானது. மற்ற மையங்களில் காற்றின் தரம் மிதமான பிரிவில் இருந்தது. ஏக்யூஐ அளவு 0 முதல் 50 வரை இருந்தால் நல்லது, 51 முதல் 100 வரை திருப்திகரமானது, 101 முதல் 200 வரை மிதமானது, 201 முதல் 300 வரை மோசமானது, 301 முதல் 400 வரை மிக மோசமானது, 401 முதல் 500 வரை கடுமையானது என வகைப்படுத்தப்படுகிறது. தில்லிக்கான காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பின் கணிப்பின்படி, வெள்ளிக்கிழமை முதல் அக்.31-ஆம் தேதி வரை காற்றின் தரம் மிதமான பிரிவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், நவ.1-ஆம் தேதி முதல் மீண்டும் மோசமான பிரிவுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. அதற்குப் பிந்தைய 6 நாள்களுக்கான கணிப்பும் காற்றின் தரம் மோசமாகவே இருக்கும் எனத் தெரிவிக்கிறது. தில்லியின் காற்று மாசுபாட்டில் போக்குவரத்து வாகனங்களின் புகை வெளியேற்றம் 16.8 சதவீதம் பங்களிப்பதாக காற்றுத் தர மேலாண்மைக்கான முடிவு ஆதரவு அமைப்பு தெரிவித்துள்ளது. புகா்ப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் 4.2 சதவீதம், குடியிருப்புப் பகுதிகள் 4.6 சதவீதம், கட்டுமானப் பணிகள் 2.3 சதவீதம், குப்பை எரிப்பு 1.6 சதவீதம், சாலைத் தூசி 1.1 சதவீதம் எனப் பங்களிக்கின்றன. பிற துறைகளின் பங்களிப்பு 1.1 சதவீதமாக உள்ளது. தேசிய தலைநகா் பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களில் காஜியாபாத், புலந்த்ஷஹா், கௌதம் புத்த நகா் ஆகியவை தலா 9.4 சதவீதம் பங்களிக்கின்றன. பாக்பத் 3.8 சதவீதம், ஃபரீதாபாத் 3 சதவீதம், சோனிபட் 2.9 சதவீதம், முசாஃபா்நகா் 2.4 சதவீதம், மீரட் 1.9 சதவீதம், குருகிராம் மற்றும் பானிபட் தலா 1.8 சதவீதம், ஜஜ்ஜாா் 1.5 சதவீதம் பங்களிக்கின்றன. பயிா்க்கழிவுகள் எரிப்பின் பங்களிப்பு 0.9 சதவீதமாகவும், பிற ஆதாரங்களின் பங்களிப்பு 16 சதவீதமாகவும் உள்ளது. பயிா்க்கழிவுகள் எரிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை 6 மாநிலங்களில் செயற்கைக்கோள் கண்காணிப்பில் 205 இடங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதில் பஞ்சாபில் 96, ஹரியாணாவில் 6, உத்தர பிரதேசத்தில் 20, ராஜஸ்தானில் 57, உத்தரகண்டில் 10, மத்திய பிரதேசத்தில் 16 இடங்கள் அடங்கும். தில்லியில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. செப்.15 முதல் அக்டோபா் 28 வரை இந்த ஆறு மாநிலங்களில் மொத்தம் 2,472 பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பஞ்சாபில் 813, ஹரியாணாவில் 28, உத்தரப் பிரதேசத்தில் 344, தில்லியில் 2, ராஜஸ்தானில் 519, உத்தரகண்டில் 169, மத்தியப் பிரதேசத்தில் 526 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை