இடைத்தேர்தலில் திமுக ஆதரவுடன் சீமான் போட்டியிடுவதை பிழைப்புவாதம் என வன்னி அரசு விமர்சித்தது குறித்து... சீமான் | உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம் இடைத்தேர்தலில் திமுக ஆதரவுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் போட்டியிடுவதை பிழைப்புவாதம் என அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கூறியிருந்தார். இது தொடர்பாக திண்டிவனத்தில் விசிக அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது, "அம்பாசமுத்திரத்தில் சீமான் பொது வேட்பாளர் என்றால் போட்டியின்றி வெற்றி பெறுவார் என்று அர்த்தமா? இனப் படுகொலைக்குக் காரணமானவர்கள் காங்கிரஸ். அதற்கு உறுதுணையாக இருந்தது திமுக. இந்த இரு கட்சிகளுடன் இணைந்த கட்சி விசிக. இந்த 3 கட்சிகளும் துரோகம் செய்ததாகக் கூறி, எதிர்ப்பு தெரிவித்து தொடங்கப்பட்ட கட்சிதான் நாம் தமிழர் கட்சி. தற்போது எதன் அடிப்படையில் திமுக ஆதரவளிப்பதாக பிரியாணி கேட்டு தட்டு ஏந்தி (சீமான்) செல்கிறார்? இப்போது யார் துரோகம் செய்கிறார்? இனப் படுகொலையைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த இயக்கம், விசிக. அந்த சமயத்தில் இவர் (சீமான்) சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். நாடாளுமன்ற முதல் உரையிலேயே இந்திய அரசு துரோகம் செய்து விட்டதாகத்தான் திருமாவளவன் பேசினார். திருமாவளவனின் கோரிக்கையை ஏற்றுத்தான், நாடாளுமன்றக் குழு யாழ்ப்பாணம் சென்றது. யாருடன் கூட்டணி வைத்தாலும், எங்களின் கொள்கையில் மாற மாட்டோம். திருட்டு திமுக, பார்ப்பன கடப்பாரையைக் கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன் என்றும், ஆரியத்துக்கு ஆதரவு என்றும் தன்னுடைய அரசியலை முன்னிறுத்திவிட்டு, இப்போது அவர் (திமுக) பிரியாணி தருவதால் தட்டு ஏந்துவது என்பது பிழைப்புவாதம் அல்லவா? சந்தர்ப்பவாதம் அல்லவா? திமுக, திராவிட கோட்பாடு, கலைஞர் கருணாநிதியையும் மோசமாக இழிவுபடுத்தியவர், சீமான். இதுபோன்ற மலிவான அரசியலை யாரும் பார்த்ததில்லை" என்று தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
திமுக ஆதரவுடன் சீமான் போட்டியா? பிரியாணிக்காக தட்டு ஏந்துவது பிழைப்புவாதம்: வன்னி அரசு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗