திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு

📅 📍 Tirunelveli, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு

கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது குறித்து... கே.என்.நேரு. - கோப்புப் படம் சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு ஊழியர்களை நியமித்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகம் அளித்த புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமையகத்தில் குற்ற எண் 02/2026-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரைவாளர் உள்ளிட்ட மொத்தம் 2,538 பணியிடங்களுக்கு ஆள்களைத் தேர்வு செய்து நியமித்ததில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து பெருமளவில் பணம் வசூலிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், இந்தப் பணப் பரிவர்த்தனைகள் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஹவாலா வழியாக மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் கே.என். நேரு தொடர்புடைய மொத்தம் 25 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, வழக்கு விசாரணைக்குத் தொடர்புடைய 170 ஆவணங்கள் மற்றும் 13 மின்னணு ஆவணங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை