திமுக ஆட்சியில் காலி மதுபாட்டிலுக்கு ரூ. 10 வாங்கியதை தவெக அங்கீகரித்து விட்டதாக தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தது குறித்து... தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம் கடந்த திமுக ஆட்சியில் காலி மதுபாட்டிலுக்கு ரூ. 10 வாங்கியதை தற்போதைய தவெக ஆட்சியில் அங்கீகரித்து விட்டதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, "எதை முறைப்படுத்துகிறார்களோ இல்லையோ, டாஸ்மாக்கில் முறைப்படுத்தி விடுகிறார்கள். திமுக ஆட்சியில் காலி மது பாட்டிலுக்கு ரூ. 10 வாங்கியதாக பாட்டு பாடிய தவெகவினர், இன்று அதனையே அங்கீகரித்து விட்டனர். நியாயப்படுத்தி விட்டார்கள். திமுக ஆட்சியில் அநியாயம் என்று சொல்லப்பட்ட பாட்டிலுக்கு ரூ. 10, இன்று நியாயப்படுத்தப்பட்டு விட்டது. இது மிகவும் தவறு. எந்தத் துறையில் கவனம் செலுத்துகிறார்களோ இல்லையோ, டாஸ்மாக் துறையில் கவனம் செலுத்தி விடுகின்றனர். போதைதான் அத்தனை குற்றங்களுக்கும் காரணமாக அமைகிறது. குழந்தைகள் தாக்கப்படுவதற்கும் கடத்தப்படுவதற்கும் போதைதான் காரணம். திமுகவிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறோம் என தவெகவால் சொல்ல முடியாது" என்று தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக மதுபானங்களின் நிர்ணய விலையுடன் சேர்த்து கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலம், நவம்பர் 1 முதல் டாஸ்மாக் கடைகளில் அந்தந்த மதுபானங்களின் எம்ஆர்பி (MRP Rate) விலையுடன் பாட்டிலின் விலை ரூ. 10 சேர்க்கப்படும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
திமுகவின் 'பாட்டிலுக்கு ரூ. 10'-ஐ அங்கீகரித்த தவெக அரசு: தமிழிசை விமர்சனம்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗