மண்டாடி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது... நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் திரையரங்குகளில் 50-வது நாளை நிறைவு செய்துள்ளது. நடிகர் சூரியின் நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படம் கடந்த செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படம் ரூ. 170 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம்பிடித்தது. சூரியுடன் நடிகர்கள் சுஹாஸ், சத்யராஜ், மஹிமா நம்பியார் ஆகியோரின் நடிப்பும் பேசப்பட்டது. கடலோடிகளின் வாழ்க்கையுடன் படக்குப்போட்டிகளைக் காட்சிப்படுத்திய விதத்தாலும் விமர்சன ரீதியாகவும் இப்படம் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், மண்டாடி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. இந்த நிலையில், திரையரங்குகளிலேயே இப்படம் 50-வது நாளை இன்றுடன் நிறைவு செய்துள்ளது. தயாரிப்பாளருக்கு மட்டுமல்லாது திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்ல லாபத்தைக் கொடுத்த திரைப்படமாகியுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
திரையரங்குகளில் 50-வது நாளை நிறைவு செய்த மண்டாடி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗