திருமணத்துக்குத் தயாரா என்பது குறித்து பல்கலை வழங்கும் படிப்பு பற்றி... கடற்கரைத் திருமணம் - படம்: TNIE கோவாவில் உள்ள வீட்டு அறிவியல் கல்லூரி நிர்வாகம் புதிதாக யோசித்து, திருமணம் செய்து கொள்ள தயாரா என்பதை உறுதி செய்துகொள்ள திறந்தவெளி பாடப்பிரிவு ஒன்றை தொடங்கியிருக்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்று தேர்ச்சி பெற்றால் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ஒருவர் திருமணம் செய்து கொள்வதற்கான தகுதிகள் வந்துவிட்டதா? மன்னிக்கும் பக்குவம் இருக்கிறதா? விட்டுக்கொடுப்பார்களா? நிலைமை மோசமடையாமல் திருமண உறவைக் கொண்டு செல்வதற்கான தகுதி இருக்கிறதா? என்பதையெல்லாம் இந்த சான்றிதழ் படிப்பின் மூலம் ஒருவர் அறிந்து கொள்ள முடியுமாம். இந்த படிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்குகிறது. அண்மைக் காலமாக இளம் தம்பதியினரிடையே திருமண உறவில் விரிசல்கள் ஏற்படுவது அதிகரித்து வரும் நிலையில் இந்த படிப்புத் தொடங்குகிறது. இந்தப் பாடத்தில் படிக்கும் போது பாடம் மற்றும் செய்முறை பயிற்சிகளும் இடம்பெற்றிருக்குமாம். தனிநபர் அறிதல், சுயஅறிதல் போன்றவையும் இடம்பெற்றிரக்கும் என கூறப்படுகிறது. அண்மையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், விரைவில் திருமணத்துக்கு முன்பு, இளைஞர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கும் மையங்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், காதலிப்பவர்கள் திருமணத்துக்கு முன்பே, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். அதாவது, 2022 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் கோவாவின் குடும்ப நல நீதிமன்றங்களில் சுமார் 3000 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1000 வழக்குகள் பதிவாகியிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
திருமணத்துக்குத் தயாரா? ஒரு கோர்ஸ் இருக்கிறது, படித்து பாஸ் ஆகிவிட்டால் செய்துகொள்ளலாம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗