திருப்பத்தூர் அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை.. கும்பலை தஞ்சாவூரில் பிடித்த போலீசார்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
திருப்பத்தூர் அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை.. கும்பலை தஞ்சாவூரில் பிடித்த போலீசார்!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தம்பதியினரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை அடித்து சென்ற வழக்கில் தஞ்சாவூரில் பதுங்கியிருந்த 5 முகமூடி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வீட்டில் புகுந்து தம்பதியினர் மற்றும் மூதாட்டியை தாக்கி கட்டிப்போட்டு தங்க நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில், 5 முகமூடி கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கார், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் போலி வாகனப் பதிவு எண் பலகைகள் பறிமுதல் செய்தனர். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேவாங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். பெயிண்டராக வேலை செய்து வரும் இவர், தனது மனைவி கீதா மற்றும் தாய் அம்பிகாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி அதிகாலை வீட்டில் மூன்று பேர் மட்டுமே இருப்பதை நோட்டமிட்ட 6 முகமூடி கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்து மூவரையும் தாக்கி கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 15 கிராம் தங்க நகைகள் மற்றும் 16 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அப்போது, தம்பதியினர் அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வருவதை அறிந்த கொள்ளையர்கள், தாங்கள் வந்த காரில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி கிராமிய போலீசார், கட்டிப்போடப்பட்டிருந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் பதிவு எண் மற்றும் செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தஞ்சாவூர் பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் (26), சேலத்தைச் சேர்ந்த கோபிநாத் (39), மணிகண்டன் (40), சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் (30) பெரம்பலூரைச் சேர்ந்த சரத்குமார் (25), ஆகிய 5 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கார், 6 கத்திகள், 11 போலி வாகனப் பதிவு எண் பலகைகள், 3 செல்போன்கள் மற்றும் கையுறைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள சூர்யா, மகேந்திரன், சுரேஷ் ஆகிய மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை