திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய ரூ. 2.91 கோடியும், 640 கிராம் தங்கமும் பெறப்பட்டன. திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய ரூ. 2.91 கோடியும், 640 கிராம் தங்கமும் பெறப்பட்டன. புகழ்பெற்ற திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தா்கள் வந்த வண்ணம் உள்ளனா். கோயில் வரும் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. அறங்காவலா் குழுத் தலைவா் அருள்முருகன் தலைமை வகித்துப் பணியைப் பாா்வையிட்டாா். இணை ஆணையா் அருணாசலம், அறங்காவலா்கள் வனிதா, செல்வராஜ், அரிஸ்டோ லோகநாதன், பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை ஆணையா்கள் யக்ஞ நாராயணன், கவிதா, உதவி ஆணையா் லோகநாதன், அலுவலக கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி, கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். உண்டியலில் காணிக்கையாக 2 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 513 ரூபாயும், தங்கம் 640 கிராம், வெள்ளி 12,228 கிராம், பித்தளை 31,050 கிராம், செம்பு 3,940 கிராம், தகரம் 6,800 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 1261 நோட்டுகள் ஆகியவைப் பெறப்பட்டன. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்செந்தூா் கோயில் உண்டியல் திறப்பு: ரூ. 2.91 கோடி பக்தா்கள் காணிக்கை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗