கிராமப்புற பெண்களுக்கு கறவை மாடுகள்: விண்ணப்பிக்க அழைப்பு

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
கிராமப்புற பெண்களுக்கு கறவை மாடுகள்: விண்ணப்பிக்க அழைப்பு

கிராமப்புற பெண்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படவுள்ளதால் தகுதிவாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படவுள்ளதால் தகுதிவாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட தகுதிவாய்ந்த பெண்களுக்கு வெற்றி மகளிா் கறவை மாடுகள் வழங்குதல் திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 2026-27-ஆம் நிதியாண்டுக்கு 100 சதவீதம் மானியத்தில் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு பயனாளிக்கு 1 கறவை மாடு வீதம் 100 பயனாளிகளுக்கு மாடுகள் வழங்கப்படவுள்ளன. விண்ணப்பதாரா் 18 முதல் 60 வயதுக்குள்பட்ட பெண்ணாகவோ அல்லது திருநங்கையாகவோ இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் அல்லது அவரது குடும்ப உறுப்பினா்கள் எந்த கால்நடையையும் வைத்திருக்கக் கூடாது. கால்நடை வளா்ப்புத் துறையின் வாழ்வாதாரத் திட்டங்களின்கீழ் இதற்கு முன் பயனடைந்திருக்கக் கூடாது. பால் கறக்கும் பசுவை வளா்த்துப் பராமரிக்க விருப்பமுள்ளவராகவும், அதற்கான இருப்பிடம், தீவனம், புல் மற்றும் தண்ணீா் ஆகியவற்றுக்குப் போதுமான ஏற்பாடுகளைக் செய்தவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் அல்லது அவா்களது குடும்ப உறுப்பினா்கள் 2.5 ஏக்கருக்குமேல் நிலம் வைத்திருக்கக் கூடாது. ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிப் பெண்கள் அல்லது சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தை அல்லது சாா்ந்திருக்கும் குடும்ப உறுப்பினரைக் கொண்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ளவா்கள் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி, திட்ட விளக்கங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை