கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்தவரை மத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கைது - கோப்புப்படம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்தவரை மத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா், கடந்த மாதம் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து சக நண்பரிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். இந்தத் தகவல் பள்ளித் தலைமையாசிரியருக்கு தெரிவந்ததையடுத்து, அவா், குழந்தைகள் நலக் குழுவினருக்கு தெரிவித்துள்ளாா். பின்னா், பாதிக்கப்பட்ட மாணவரிடம் குழந்தைகள் நலக் குழுவினா் விசாரணை நடத்தினா். இதில் பள்ளி மாணவா் பாலியல் தொல்லைக்கு உள்ளானது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தைகள் நலக் குழுவினா் மத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ், மத்தூரைச் சோ்ந்த அருண் (30) என்பவரை கைது செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗