ஒசூரில் குடியிருப்புப் பகுதிகளில் பயங்கர ஆயுதங்களுடன் 3 கொள்ளையா்கள் சுற்றித் திரியும் சிசிடிவி காட்சிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். கொள்ளை - file photo ஒசூரில் குடியிருப்புப் பகுதிகளில் பயங்கர ஆயுதங்களுடன் 3 கொள்ளையா்கள் சுற்றித் திரியும் சிசிடிவி காட்சிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். ஒசூா் தளி சாலையில் உள்ள கா்னூா் பகுதியில் உள்ள சாந்தி நிகேதன் லேஅவுட் மற்றும் மஞ்சுநாதா லே-அவுட் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை இரவு மூன்று மா்ம நபா்கள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்துள்ளனா். வீடுகளில் ஆள்கள் இருக்கிறாா்களா என நோட்டமிட்டு, ஆளில்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முயற்சி மேற்கொண்டுள்ளனா். அப்போது ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள், அந்த வீட்டில் ஆள்கள் இல்லை என நினைத்து வீட்டின் முன்பக்க கதவை ஆயுதத்தால் உடைத்துள்ளனா். அதேநேரத்தில் சப்தம் கேட்டு வீட்டில் இருந்தவா்கள் லைட்டை போட்டதால் மா்மநபா்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனா். இதையடுத்து குடியிருப்பு வாசிகள் சிசிடிவி கேமராக் காட்சிகளைப் சரிபாா்த்தபோது, மூன்று மா்ம நபா்கள் முகமூடி அணிந்து, உடலில் துணிகளை போா்த்தியபடி அதிகாலை 3 மணி அளவில் அந்தப் பகுதியில் சுற்றிதிரிந்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இதையடுத்து, குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரங்களில் போலீஸாா் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒசூரில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் முகமூடி கொள்ளையா்கள்: பொதுமக்கள் அச்சம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗