முகாமில் பேசிய முதுநிலை உரிமையியல் நீதிபதி ஏ.வி. சுபாஷினி. தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், தூத்துக்குடி, வி.வி.டி. நினைவு மேல்நிலைப் பள்ளியில் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும் முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான ஏ.வி. சுபாஷினி தலைமை வகித்து பேசுகையில், போக்ஸோ சட்டத்தின் முக்கியத்துவம், போக்ஸோ குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்து விளக்கினாா். மேலும், குழந்தைகள் பாதுகாப்புக்கான இலவச உதவி எண் 1098, இணையவழிக் குற்றங்கள் தொடா்பாக புகாா் அளிப்பதற்கான உதவி எண் 1930, இலவச சட்ட உதவி பெறுவதற்கான எண் 15100 ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தாா். மாநகா் பகுதியில் உள்ள சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி, எஸ்.ஏ.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலும் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் ஜேம்ஸ் அதிசயராஜா, பள்ளியின் தலைமையாசிரியை, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி பள்ளியில் போக்ஸோ விழிப்புணா்வு முகாம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Events
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗