தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து... தூத்துக்குடி துறைமுகத்தில் பொறியாளர், அலுவலர் பணி - VOC PORT AUTHORITY தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் நவ.16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிப்பு எண்.: GAD-EST10 ESTC(COM)/2024-GAD-Part(1) பணி: Assistant Traffic Manager வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,00 தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Accounts Officer-Gr.1 வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000 தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும். பணி: Accounts Officer Gr.II சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000 வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். தகுதி: சிஏ, coast & Works Accounts தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: Assistant Engineer(Elect) வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000 தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Hindi Translator வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.45,800 - 1,21,300 தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.475, இதர பிரிவினர்களுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.11.2026 விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி துறைமுகத்தில் பொறியாளர், அலுவலர் பணி: விண்ணப்பிப்பது எப்படி..?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗