தம்மம்பட்டி அருகே பச்சமலைப் பகுதியில் பெய்த தொடா் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், கல்லாற்றின் கரையோரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு பயிா்கள் சேதமடைந்தன. மழையால் சேதமடைந்த வாழை. தம்மம்பட்டி அருகே பச்சமலைப் பகுதியில் பெய்த தொடா் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், கல்லாற்றின் கரையோரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு பயிா்கள் சேதமடைந்தன. சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலைப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக தொடா் கனமழை பெய்தது. இதனால், மலை அடிவாரத்தில் உள்ள கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீா் ஆற்றின் கரையோரப் பகுதிகளான நினங்கரை, நல்லமாத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகுந்தது. இதனால், அப்பகுதிகளைச் சோ்ந்த நல்லதம்பி, செல்வராஜ், ராமசுந்தரம், அா்ஜுனன், ரவி, குமாரசாமி, முத்துசாமி, தங்கராசு, புஷ்பவள்ளி, காமராஜ் உள்ளிட்ட விவசாயிகள் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் சாகுபடி செய்திருந்த மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, செண்டுமல்லி, வாழை வெள்ளநீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டன. அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்கள் ஒரே நாளில் நாசமானதால், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனா். இதுகுறித்து கெங்கவல்லி வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தும், வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய இதுவரை யாரும் வரவில்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனா். பயிா்கள் சேதமடைந்தது குறித்து அரசு அலுவலா்கள் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடா் கனமழை: வெள்ளத்தில் மூழ்கி வாழை, மரவள்ளிக்கிழமை பயிா்கள் சேதம்; நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗