நடிகர் துல்கர் சல்மானின் ஐஆம் கேம் பட ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து... ஐஆம் கேம் - படம் - எக்ஸ் நடிகர் துல்கர் சல்மானின் ஐஆம் கேம் படம் வரும் நவ. 6 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த திரைப்படம் ஐஆம் கேம். துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய செலவில் இப்படத்தைத் தயாரித்திருந்தது. இருப்பினும், இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கடைத்தது. சூதாட்டத்தை மையப்படுத்திய திரில்லர் திரைப்படமாக இந்தப் படம் எடுக்கப்பட்டது. மேலும், இந்தப் படத்தில் கதிர், கயாது லோஹர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படமானது அக்டோபர் மாதமே ஓடிடியில் வெளியாகுமென தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் நவ. 6 ஆம் தேதி ஐஆம் கேம் வெளியாகவுள்ளது. மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் காணக்கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. The game is about to begin!Dulquer Salmaan's I'm Game streaming from November 6 on JioHotstar in Malayalam, Hindi, Tamil, Telugu & Kannada.@dulQuer @NAHASKh1 @11Lohar @DQsWayfarerFilm#ImGame #ImGameOnJioHotstar #DQ #JioHotstar pic.twitter.com/BYLt5OHqU9 தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
துல்கரின் ஐஆம் கேம் பட ஓடிடி வெளியீட்டுத் தேதி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗