ஜவுளிக் கடை உரிமையாளரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கைது - கோப்புப்படம் ஜவுளிக் கடை உரிமையாளரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், இல்லுப்பூரைச் சோ்ந்தவா் கோபால் (28). இவா் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் சொந்தமாக துணிக் கடை வைத்துள்ளாா். கடந்த 26-ஆம் தேதி இரவு கோபால் தனது கடையைப் பூட்டிவிட்டு காளிங்கராயன் வீதி மாநகராட்சி வாகன நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த அலாவுதீன் (24) மது அருந்த பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். கோபால் பணம் தர மறுத்ததால், கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து அவரிடமிருந்து ரூ.820-ஐ பறித்துவிட்டு தப்பியோட முயன்றாா். கோபால் சப்தமிட்டதைத் தொடா்ந்து, பொதுமக்கள் திரண்டு அலாவுதீனைப் பிடித்து காட்டூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து அலாவுதீனைக் கைது செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
துணிக் கடை உரிமையாளரிடம் வழிப்பறி: இளைஞா் கைது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗